கனவும் மெய்ப்பொருளும், கடிதம்

ஆசிரியருக்கு,
தத்துவத்திற்கு நீங்கள் கொடுத்த விளக்கம், Philosophy comes from the root word, Philo+ Sophia .சரியானது. கல்லூரியில் கற்ற விளக்கம் ஆனால் நீங்கள் அதை எளிமையாக கூறும் போது  மேலும் அதன் அர்த்தம் முழுமையடைகிறது.முழுமையறிவு காணொளிகளை பார்த்த உடன் மின்னஞ்சலில் எழுதுகிறேன்..காரணம் தாமதித்தால் அதன் மொழி மாறி விடும் .மனித இயல்பு.போகும் வழியில் யாராவது பிராத்தனை செய்தால் அவருக்காக நாம் பிராத்தனை செய்வது நம்மிடமுள்ள தெய்வத்தை கண்டுகொள்வதே.மரபு என்பது நீட்சியே.இங்கர்சால் அரிஸ்டாட்டிலின் நீட்சி, ஓவியர் பிகாசோவின் நீட்சி நவீன ஓவியம்.மரபுநீட்சி தொடரும்.அமைப்பு ரீதியாக வெகுசிலரே தத்துவத்தை,மரபை  வெளியே இருந்து புரிந்து கொள்ள முடியும். மொழிதான் நம்முடைய ஆழ்மனது (Subconscious)என்பது அறிவியல்.நல்ல மொழி வளம் உள்ளவர்கள் உருவாக்கும் கருத்துக்கள் நிலைத்து நிற்கும்.அலங்கார மொழி (Ornamental language) சிறிது காலம் பயன்படும்.மரபை கற்க அலங்கார மொழியிலிருந்து, சாதாரண தமிழ்  மொழியில் சொல்லிக்கொடுக்க முழுமையறிவு தேவை.பத்து பேர் தேறினாலும்,பத்துபேரும் பிறருக்கு மரபு பற்றிய அறிவை  ஏற்றும் ஆசிரியர்களாக இருப்பார்கள் என்பது உறுதி.
முயற்சி தொடரட்டும்.
தா.சிதம்பரம்.
முந்தைய கட்டுரைஎழுத்தும் தத்துவம்