அன்புள்ள ஜெ,
என் தந்தையை உங்களுக்கு நினைவிருக்கலாம், என்னுடைய ஒரு கடிதத்தில்(பூன், இர்வைன்) அவரைப் பற்றிய ஒரு குறிப்பு எழுதியிருந்தேன். உங்களுடைய தீவிர வாசகர். இப்போது ஆலயக்கலை வகுப்பு முடிந்து உங்களுக்கு அனுப்புமாறு கீழேயுள்ள கடிதத்தை எனக்கு whatsapp செய்தார். அவர் சார்பாக.
அன்புள்ள ஜெயமோகன் அவர்களுக்கு,
இதுவே நான் எழுதும் முதல் வாசகர் கடிதம்.
இம்மாதம் ஜனவரி 24,25,26 ந்தேதி அந்தியூர் வெள்ளிமலையில் ஆசிரியர் ஜெயக்குமார் அவர்கள் நடத்திய ஆலயக்கலை அறிமுக வகுப்பில் கலந்து கொண்டவர்களில் நானும் ஒருவன்.
ஆலயங்களுக்குச் செல்கிறோம். நீள் வரிசையில் நின்று நேரம் செலவளித்து கருவறையில் இருக்கும் இறைவனை வணங்கி வழிபாடு சடங்குகள் நடத்தி நெற்றியில் விபூதி குங்குமம் பூசி பின் வழிபாடு முடிந்தது என்று விரைவாக வெளியே வருகிறோம்.
நம்முடைய பார்வையில் கருவறையில் உள்ளதுதான் இறைவன் என்று நினைக்கிறோம்.
அக்கோவில் முழுவதும் ஆங்காங்கே சுவர்களிலும் கற்தூண்களிலும் விழி நிரை கொள்ளும் இறையின் திருமேனிகள் எத்துணை…எத்துணை அவற்றையெல்லாம் ஓரிரு வினாடியேனும் நேரம் ஒதிக்கி விழி கொண்டு காண்கிறோமா?
கோவில் முழுவதும் இறைவனின் வடிவம்.
அந்த இறைவனின் வடிவத்தை பக்தியோடு சிரத்தையோடு சிற்பிகள் செதுக்கினார்கள்.
அவர்களைப் பற்றியாவது ஒரு சிறு குறிப்பு நமக்குத் தெரியுமா?
அல்லது தெரியத்தான் முயற்சி செய்கிறோமா?
நம் கோவில்கள் எவ்வளவு வரலாறுகளைத் தாங்கியுள்ளது.
இதுபோன்று என்னற்ற தகவல்கள் சிலவற்றாவது தெரியவேண்டும் என்று நேர்த்தியாக எல்லோருக்கும் புரியும் படியும் அவைகள் பற்றி வாசிக்கவும் சில நூல்களையும் நயம்பட நம் ஆசிரியர் திரு. ஜெயக்குமார் அவர்கள் இவ்வாலக்கலை அறியும் வகுப்பு மூலம் தக்க சான்றுகளோடு விளக்கியது எனக்கு மட்டுமல்ல இந்நிகழ்வில் பங்கு பெற்றோர் எல்லோருக்கும் மிக்க பயனுள்ளதாக இருந்தது.
நன்றி
அருணாச்சலம்