ஆசிரியருக்கு.
சிந்தனை வேறு சிந்தித்தல் வேறு.சுந்தர ராமசாமி,ஆற்றூர் ரவி வர்மா உவமைகள் கூறினீர்கள். அசலான சிந்தனை எப்படி உருவாகிறது என்பதையும் எடுத்துறைத்தீர்.சுய சிந்தனை வளர நிறைய வாசிக்க வேண்டும்.வாசித்ததை அசைபோட்டு அதை மீண்டும் தன் வழியே சுயமாக சிந்தித்து எழுதவோ,பேசவோ வேண்டும்.
Education is not just filling in the bucket of information but to make oneself to think.என்பார்கள்.சிந்தனை திறன் இயல்பானதா? இல்லை வாசித்து உருவாக்கி கொள்வதா? என்பதற்கும் விளக்கம் அளித்தீர்கள்.நேற்று இசைஞானி இளையராஜாவை இந்து பத்திரிக்கையின் நிருபர் திரு. கோலப்பன் அவர்களின் பேட்டி காணோளியை கண்டேன்.சிம்பொனியை ஒரு பாமரன் எப்படி புரிந்து கொள்வது?என்பது ஒரு கேள்வி.ராஜா அதற்கு இசை என்பதை விளக்க முடியாது அதை அனுபவிக்கத்தான் முடியும்.ரசனை இருந்தால் என்றார்.மேலும் அவர் சிம்பொனியை எந்த மேற்கத்திய சிம்பொனி சாயல் இல்லாமல் அமைத்திருப்பதாக சொன்னார்.இந்த உத்வேகம் அவருக்கு எங்கிருந்து எப்படி வருகிறது என்பதற்கு இயல்பாக வருகிறது என்றார்.அந்த இயல்பை கண்டு கொள்ள அவரின் முயற்சியையும் கூறினார்.சிந்திக்கும் இடத்தில் தெய்வம்.அது இசையாகவும் இருக்கலாம். எழுத்தாகவும் இருக்கலாம் அல்லது பிற கலை அறிவியலாகவும் இருக்கலாம். மொத்ததில் சிந்தனை செய்ய நல்ல மனிதர்களின் தொடர்பும், வாசிப்பும் தேவை என்பதை ஆணித்தரமாக எடுத்துரைத்தீர்.
காணேளி அசலான சிந்தனையாக இருந்தது.
தா.சிதம்பரம்.