அன்புள்ள ஜெ
நலமா ?
நிறைய வேலைகளுக்கிடையே அயராது இலக்கியத்திற்காக இரவு பகலாக உழைக்கிறீர்கள் உங்கள் நலத்திற்காக மனதார இறைவனை தொழுது நிற்கிறேன்.இனிய பொங்கல் வாழ்த்துக்கள்..இன்றைய நல்ல நாளில் உங்களது இந்த உரையைக்கேட்க நேர்ந்தது எனதுக்கொடுப்பினை.இப்பொழுது உங்களை மானசீக குருவாக ஏற்றுக்கொண்டு படைப்புகளை எழுத ஆரம்பித்துவிட்டேன்.”நெருப்பு ஓடு“என்ற எனது நாவல் உங்களுக்கு அனுப்பினேன் உங்களை வந்தடைந்திருக்கும் என நம்புகிறேன்.விஷ்வகர்மா சமூக பொற்கொல்லரான நல்லவர் எனது தாத்தா அவர் வல்லவராக இல்லாமல் போனதை சொல்லும் நாவல் அது. அடுத்த ஒரு நாவல் எழுதி உங்களுக்கு சமர்ப்பிக்க வேண்டும்..அதற்கு அந்த நாவல் அவ்வளவு தகுதியோட அமையவேண்டும்..எனது கூட்டுக்குடும்ப சூழல் அதற்கு ஏற்றவாறு அமையவேண்டும் என்பதே எனது ஆசை கனவு.
இந்த தத்துவங்களை கற்றறியும் வாய்ப்பு எனக்கு ஒருவேளை கிடைத்திருந்தால் இன்னும் சிறப்பாக எழுதியிருக்க முடியும்.எனக்கு அந்த பொன் வாய்ப்புகள் அமையவில்லை.பரவாயில்லை உங்களது எழுத்துக்கள் இந்த காணொலிகள்..பேச்சுக்கள் எழுத்துக்கள் வழியாக எனக்கு போதுமான தத்துவங்கள் என்னை வந்தடைவதே எனக்கு பிரபஞ்சம் செய்த பெரிய உதவி.உங்களது இலக்கிய எழுத்தாளர்களை உருவாக்கும் கனவுகள் மெய்ப்படட்டும்
இந்த நல்ல நாளில் உங்கள் ஆசிர்வாதமாக இந்த காணொலியை எடுத்துக்கொள்கிறேன்.. மகிழ்ச்சி
அன்புடன்
தேவி லிங்கம்
வேதாரண்யம்
அன்புள்ள தேவி லிங்கம்
நெருப்பு ஓடு இன்னும் வாசிக்கவில்லை. எடுத்து வைத்திருக்கிறேன். நல்ல நாவல் என்று நண்பர் ஒருவர் சொன்னார். வாசித்துவிட்டு எழுதுகிறேன்.
தத்துவங்களை அறிவதற்கான வழி அதற்கான தேடலுடன், ஆவலுடன் இருப்பதே. நாம் அறியும் தத்துவசிந்தனைகளை நாம் நமக்குள் தொகுத்துக்கொண்டே இருப்போம். அதுவே சரியான தத்துவக் கல்வி.
ஜெ