ஆசிரியருக்கு வணக்கம்
உங்களிடம் வகுப்பில் முன்பு ஈஷாவாஸ்ய உபநிஷதை கற்ற அனுபவத்தை பற்றி பகிர்ந்தேன். அன்று கற்பித்த ஆசிரியர் ஈஷா வாஸ்ய உபநிஷதினஅ முதல் வரியான ஈஷா வாஸ்யம் இதம் சர்வம் என்ற வார்த்தைககு இங்கு அணைத்தும் இறைவனுடையதாகவும், அந்த தியாக பாவத்துடன் உலகத்தை அனுபவிக்க வேண்டும் என்ற அறிவுரையாக கற்பித்தார். அவர் சொன்னது முதல் என் ஆழ் மனதில் உலகத்தை வேவு பார்க்கும் ஒர் முதலாளியின் படிமம் எப்போதும் இருந்தது. உபநிஷத்துகளின் பார்வை மீது எனக்கு பெரிய மரியாதை இருந்தாலும் அந்த ஆழ் மன படிமம் அதை மேலும் வாசிக்க ஒரு தடையாக இருந்தது. உன்மையில் எனக்கு அப்படி ஒரு தடை இருந்ததே தெரியவில்லை.
மூன்றாம் தத்துவ வகுப்பில் உபநிஷதை எவ்வாறு அணுக வேண்டும் என்று சொன்னதுமே அந்த தடை விலக தொடங்கியது. ஒரு கவித்துவ வரியாக, தியானத்திற்கான வரியாக பல வருடங்களுக்கு பின்பு ஈஷா வாஸ்ய உபநிஷதை வகுப்பில் சந்தித்தேன். இங்கு அனைத்திலும் வாழ்வது இறையே என்ற வரியை கேட்டதும், சொல்ல முடியாத ஒரு விடுதலை. அந்த பழைய வேவு பார்க்கும் முரட்டு அதிகாரி மறைந்து படைப்பின் ஒவ்வொரு துளியிலும் அழகே வடிவான அந்த இறையை என் கற்பனையில் வளர்த்ததும், அந்த அனுபவம் தந்த விடுதலையை சொல்லி விவரிப்பது கடிதம். முழு வகுப்பும் கண்ணீர் மல்க அந்த ஒரு வரியே என்னுள் உயிர் நாடியாக துடித்தது. இனிமேல் வரட்டு வேதாந்தம் என்ற சொல் என் அகராதியில் இல்லை, அது வண்ணமயமாக விட்டது. மிக்க நன்றி
தேஜஸ் ஶ்ரீனிவாசன்