மோனியர் விலியம்ஸ், கடிதம்

அன்புள்ள ஜெ

முழுமையறிவு காணொளிகளை தொடர்ச்சியாகப் பார்த்துவருகிறேன். பல காணொளிகள் ஒரு முழுநாளும் சிந்தனையில் ஓடிக்கொண்டே இருப்பவை. யூடியூபில் லட்சக்கணக்கான ஹிட்ஸ் வாங்கி ஓடிக்கொண்டிருப்பவை பெரும்பாலும் முழுக்குப்பைகள். நடுவே இதைப்போல அரிதான காணொளிகள். இதிலுள்ள பல காணொளிகளை என்னால் ரத்தினங்கள் என்றே சொல்லமுடியும். ஆனால் அண்மையில் வெளிவந்த மோனியர் வில்லியம்ஸ் பற்றிய காணொளி மிக அரிதானது. பலர் தவறவிட்டுவிடக்கூடும் என்பதனால் இதை எழுதுகிறேன். வேதங்களின் வேர்ப்பரப்பில் இருந்து தொடங்கி அவை அச்சேறியவிதம், அவை பொருள்கொள்ளப்பட்ட வரலாறு என மிகமிக அகன்ற ஒரு சித்திரத்தை எளிமையாக அளிக்கும் ஓர் உரை. நம்முடன் நேரில் உரையாடுவதுபோன்ற பாவனை. அதை கேட்டு முடித்தபோதுதான் அரை மணிநேரத்தில் ஒரு பெரிய ஆன்மிகவரலாற்றுச் சித்திரம், ஒரு சிந்தனைச்சித்திரம் அளிக்கப்பட்டதை உணர்ந்தேன். நன்றி

என்.ஜெயராமன்

முந்தைய கட்டுரைஉபநிடத தரிசனம்
அடுத்த கட்டுரைசிறுமகிழ்வுகள், கடிதம்