ஆசிரியருக்கு,
உங்கள் இந்த காணொளியில் பேச்சில் பொறுமை காணப்படுகிறது.ஆங்கிலத்தில் Transactional Analysis என்ற புத்தகத்தை Eric Berne என்ற உளவியலாளர் எழுதினார்.அவர் கூறிய கருத்துக்களை ஒத்து உங்கள் தலைப்பு இருந்தது. ஒரு மனிதன் தன்னைத்தானே சோதனை செய்து கொண்டால் தெய்வம் அவனருகே இருக்கும். இதை சுந்தரம் ராமசாமியின் எழுத்துக்களில் காணலாம்.தான் கண்டு அனுபவித்ததை மனதில் அசைபோட்டு மிகை படாமல் எழுதுவது ஒரு கலை. அது எழுத்தாகத்தான் இருக்க வேண்டும் என்று இல்லை.எந்த கலையாகவும் இருக்கலாம்.இந்த உளவியல் கருத்து ஒருமுகச்சிந்தனை single mindedness, அல்லது Mindfulness. என்று அழைக்கப்படுகிறது .கல்வித்துறையில் இது பயன்படுத்தப்பட்டு வெற்றிகரமாக வாழ்க்கையில் முன்னேறிய மாணவர்களை அறிவேன்.தாங்கள் நடைபயிற்சியின் போது தெய்வத்தை உங்கள் நண்பருக்கு அடையாளப் காட்டியது இந்த உளவியல் கருத்துதான்.தனிமனிதனுக்கு ஏதாவது ஒன்றில் பிடிப்பு கண்டிப்பாக தேவை.அது இலக்கியமாக அல்லது சினிமாக இருக்கலாம்.ஒன்றை முழுமையாக செய்யும் போதும், முழுமையாக ரசிக்கும் போதும் தன்னை மறந்து செயல் படும் போதும் நம்மிடம் எப்போதும் அருளும் தெய்வம் இருக்கும்.The dancer disappears when the dance evoles on the stage. என்பார்கள். நமது கலாச்சாரத்தில் இந்த அருகமர்ந்து எப்போதும் அருளும் தெய்வத்தை கடை பிடித்து வெற்றி கண்டவர்கள் உண்டு.மனிதனை மனிதன் ஆக்குவது இந்த தற்சோதனை என்ற உளவியல் சோதனைக்களம். .உங்களுடைய வாழ்க்கையில் ஏற்பட்ட தனிப்பட்ட சிந்தனைகளை Subjective thoughtsஐ நீங்கள் Objective thoughts ஆக மாற்றும் போது அது உங்கள் வாசகர்களிடையே நல்ல புரிதலை ஏற்படுத்தி அவரவர்கள் தங்கள் தெய்வங்களை அடையாளம் கண்டு கொள்வார்கள்.ஒரு தேர்ந்த உளவியல் ஆலோசனை வாசகர்களுக்கு வழங்கியதற்கு நன்றி.
தா.சிதம்பரம்