எழுதுவது என்பது…

அன்புள்ள ஜெ

வழக்கம் போல மிகவும் அர்த்தம்பொதிந்த உரைகளில் இதுவும் சிறந்ததொரு உரை.வெளிப்படுதல் தான் மிக முக்கியம் என ஒவ்வொரு உரையிலுமே அறிவுறுத்திக்கொண்டே இருக்கிறீர்கள். அது உண்மைதான் இயற்கை பறவைகளுக்கு அழகான இறக்கைகளை கொடுத்திருக்கிறது.பூக்களுக்கு நிறத்தை கொடுத்திருக்கிறது. நீருக்கு பொங்கிபிரவாகம் ஆகும் தன்மையை கொடுத்திருக்கிறது

அது போல மனிதனுக்கு கலையைக்கொடுத்திருக்கிறது.

அது பாடலாகட்டும் .எழுத்தாகட்டும் நடனமாகட்டும் .அதன் வழியே மனிதர்கள் அழகாக வெளிப்படுகிறார்கள்.வானவில்லின் நிறம்போல ஒவ்வொரு கலைக்கும் ஒவ்வொரு வடிவம் நிறமுமாய் மனிதன் தன் வெளிப்படுதல் மூலம் மனிதர்களை வசீகரிக்கிறான்.அதிலும் மிகவும் அற்புதமாக கலை வெளிப்படும் மனிதர்கள் ஆளுமையாகிறார்கள் அதற்கு நீங்கள் சிறப்பான உதாரணம்.விஷ்ணுபுரம் .குமரித்துறைவி எல்லாம் அதற்கு ஆகச்சிறந்த உதாரணங்கள் நாங்களெல்லாம் உங்கள் வெளிப்படுதலை ரசித்து பின்வரும் கலை சார்ந்த மனிதர்கள் தினமும் நீங்கள் எழுதிவெளிவரும் காவியம் நல்லதொரு வெளிப்படுதல்.இதோ இந்தக்கடிதம் கூட ஒரு வெளிப்படல் தான்.புத்தகங்களை படித்து முடித்தவுடன் அதைப்பற்றி எழுதச்சொல்லி நினைவில் வைத்துக்கொள்ள சொல்கிறீர்.உங்களது இந்த காணொளியை நினைவில் வைத்திருந்து எதாவது தொடர்ந்து எழுதிக்கொண்டே இருப்பதற்காக இந்தக்கடிதத்தை எழுதி நினைவுகளை மூளையில் சேமித்துக்கொள்கிறேன்

என்றும் அன்புடன் 

தேவி லிங்கம் 

முந்தைய கட்டுரைதெய்வம், கடிதம்
அடுத்த கட்டுரைசிந்திப்பதன் இறுக்கம்.