ஆசிரியருக்கு,
ஒரு இந்திய தத்துவ வகுப்புக்கு சென்று வந்தது போன்ற உணர்வு. கருத்துக்களை எடுத்து கூறிய விதம் தர்க்கரீதியாக இருந்தது.It is a hard nut to crack. என்பார்கள் .ஓரளவுக்கு தர்க்க சாஸ்திரத்தின் அடிப்படை தெரிந்தவர்கள் புரிந்து கொள்வார்கள்.நிறைய தத்துவம் சம்பந்தமான வாசிப்பு தேவை.ஆத்திகம் இருக்கும் வரை நாத்திகமும் இருக்கும்.தர்க்க சாஸ்திரமும் இருக்கும்.
நியாய சாஸ்திரத்தின் படி நிலைகளை புரியும் படியாக எடடுத்துறரைத்தீர்கள்.பனிக்கட்டி கடலில் மூழ்காமல் இருப்பது நல்ல உதாரணம் .அதுபோல நியாயசாஸ்திரம் புறவய பெளதீகத்தை எடுத்து கொண்டு தர்க்கத்தை கையாண்டு கடவுளை நிரூபிக்கிறது. காரண காரிய தொடர்பை விளக்கும் போது காரணம் இல்லாமல் காரியம் இல்லை என்பது தெளிவு.அவன்இன்றி ஒரு அணுவும் அசையாது என்பது இதைத்தான்.
ஞானம் கூடுவதும் இப்படிதான்.அறிவை உபயோகப்படுத்தும் போது எங்கிருந்தோ நமக்கு ஞானம் கூடுகிறது என்று சிந்தித்தால் அதை அறிந்து கொள்ளலாம்.
தத்துவம்தான் அடிப்படை அறிவு அதன் மீதுதான் அறிவியல் ஆன்மீகம் கலை எல்லாம் ..அப்படி இல்லையென்றால் இந்திய தத்துவ மரபு ஆண்டாண்டு காலமாக நின்றிருக்காது.மேலை நாட்டு மரபுக்கும் நமக்கும் இதில்தான் வேறுபாடு.
இந்திய தத்துவ சிந்தனைகளை ஒரு Nutshell ல் கூறமுடியாது எனினும் சுருக்கமாக எடுத்து சொல்லி விளங்க வைத்ததற்கு நன்றி.தத்துவ வகுப்புகளைமுழுமையறிவு Unified wisdom மூலமாக கொண்டு செல்லுங்கள். நீங்கள் ஒரு முழுமையான தத்துவ ஆசிரியராக பரிணமிக்கும் காலம் வெகு தொலைவில் இல்லை என்பது உறுதி.
தா.சிதம்பரம்
T.Chidambaram