இசைநாட்கள்

அன்புள்ள ஜெ,

வணக்கம்.

தந்தையின் பணி மாறுதல் காரணமாக பல இடங்களுக்கு சென்றதால், கர்நாடக  சங்கீதத்தை பல ஆசிரியர்களிடமிருந்து கற்றேன். அடிப்படையே தெரியவில்லை என்று தோன்றிக் கொண்டே இருந்தது.  ஆலயக்கலை வகுப்பில் ஜெயக்குமார் Sir பாடியகாலை தூக்கி ஆடும் தெய்வமேகேட்டபோது, மரபிசை வகுப்பில் கண்டிப்பாக கலந்து கொள்ள வேண்டும் என்று தோன்றியது. அதற்கேற்ப, வகுப்பை பற்றிய அறிவிப்பு வந்தவுடன் பதிவு செய்துவிட்டேன்.

இசையின் உருவமே சிற்பம்; சிற்பத்தின் அருவமே இசைஎன்ற கருத்துடன் வகுப்பு தொடங்கியது. கர்நாடக இசையில்  தெலுங்கு,சமஸ்கிருதத்தில் பாடல் இயற்றியவர்களான தியாகராஜர்முத்துஸ்வாமி தீக்ஷிதர், சியாமா சாஸ்திரிகள் பற்றியும், தமிழிசை சீர்காழி மூவராகிய முத்து தாண்டவர், மாரிமுத்தா பிள்ளை, அருணாச்சல கவிராயர் பற்றியும் அறிந்து கொண்டோம். பாடி நிறுவிய சமூகம் நம்முடையது.

வரலாற்றில் இசை குறிப்புகள் வட இந்தியாவில் புத்தர் காலத்திலும், தென்னிந்தியாவில் சாதவாகனர் காலத்திலும் இசை, நாடகம், நடனத்திற்கு தனித்தனியாக நூல்களில் இருந்திருக்கின்றன. தமிழில் பழமையான நூலான‌ தொல்காப்பியம், இசைக்கருவிகள் குறித்தும், இடத்திற்கு உரிய பண் குறித்தும் வரையறை செய்கிறது. சிலப்பதிகாரம் மதுரை காண்டம்– ஆய்ச்சியர் குரவையில் ராகங்கள் பற்றி மிக விரிவான குறிப்புகள் உள்ளன.புகார் காண்டம் கடலாடு காதை, அரங்கேற்று காதையில் நடனம் விரிவாக விளக்கப்படுகிறது. 

சமகாலமான பொதுயுகம் 3 ஆம் நூற்றாண்டில், பரத முனிவரின் நாட்டிய சாஸ்திரம் நாடகத்துக்கான இலக்கண நூலாக விளங்குகிறது. பௌத்த மடாலயங்களிலும், சமண வழிபாட்டு தளங்களிலும் இசை மரபு இருந்திருக்கிறது. தமிழ் மரபில் ஐவகை நிலங்களுக்கு குறிஞ்சிப் பண், நெய்தல் பண் , செம்பாலை பண் , முல்லைப் பண், மருதப்பண் ஆகியவை இருந்திருக்கின்றன.  சங்கீத ரத்னாகரம் என்ற நூல் இன்றைய சங்கீதத்தின் அடித்தளமாக உள்ளது. இப்படியாக கர்நாடக இசையின் வரலாற்றை அறிந்து கொண்டோம்.

தற்காலத்தில் ஸ்வரளி வரிசை, ஜண்டை வரிசை தொடங்கி கீதம், ஸ்வர ஜதிகள், வர்ணம் வரை உள்ளது அப்யாச(Abyasa) கானம். இவை பயிற்சிக்கு  மட்டுமே. இதற்குப் பின் தான், மேடையில் பாடக்கூடிய சபா கானம் கற்றுக் கொடுக்கப்படும்

கச்சேரி வடிவம் கச்சேரி பொதுவாக ஒன்றிலிருந்து மூன்று மணி நேரம் வரை நடக்கும். சுமார் 10 லிருந்து 15 கீர்த்தனைகள் பாடப்படும். ஒரு கீர்த்தனை மிக விரிவாக பாடப்படும். பல்லவி , அனுபல்லவி, சரணம் ஆகியவை கல்பித சங்கீதம். ராக ஆலாபனை, நிரவல், சங்கதி, கற்பனை ஸ்வரம், தானம் ஆகியவை மனோதர்ம சங்கீதம். இனிமேல் கச்சேரி கேட்கும்போது என்ன நடக்கிறது என்று புரிந்து, ரசிக்க முடியும் என்ற நம்பிக்கை வந்திருக்கிறது.

ஸ்வரங்களில் இருந்து ராகங்கள் ஸப்த ஸ்வரங்களில் ஷட்ஜம்(), பஞ்சமம்() வில் வகைப்பாடு இல்லாததால், அவை பிரக்ருதி ஸ்வரங்கள்.(அதனால்தான் பாட்டு வகுப்புகளில் ஸ,, ஸ் பாடி ஆரம்பிக்கிறோம் என்று புரிந்தது. அடிப்படை தெரியவில்லை என்று நான் நினைத்தது சரிதான்.)  மற்ற ஸ்வரங்களில் மத்திமம்() விற்கு இரண்டு வகைப்பாடுகளும்,   ரிஷபம்(ரி),  காந்தாரம்(),  தைவதம்(),   நிஷாதம்(நி) ஆகிய ஸ்வரங்களுக்கு, மூன்று வகைப்பாடுகளும் உள்ளன. பல வண்ணங்களின் கலவை ஓவியம் ஆவது போல், இந்த ஸ்வரங்களின் கலவை ராகம் ஆகிறது. மாயா மாளவ கௌளை, மோஹனம், ரீதி கௌளை, சங்கராபரணம், கரஹ‌ரப்பிரியா, கல்யாணி, காலை ராகங்களான பௌலி, ரேவகுப்தி, பூபாளம் ஆகிய ராகங்களின் ஸ்வர ஸ்தானகம், ஒன்றிரண்டு கீர்த்தனைகள், வீணை, நாதஸ்வரம் போன்ற இசைக்கருவிகளில் கீர்த்தனைகள், இறுதியாக ஒரு திரையிசை பாடல் என்று கேட்டோம்.

Projector ஐ உபயோகப்படுத்தவே இல்லை. இரண்டரை நாளும் கேட்க வேண்டியது மட்டும்தான்.அதிகம் தெரிந்திராத இசைக் கலைஞர்களின் பெயர்களையும், அவர்கள் வாழ்வில் நடந்த சுவாரசியமான சம்பவங்களையும் கேட்டோம். இசைக்கருவிகளான வீணை, நாதஸ்வரம் பற்றியும், வயலின் எவ்வாறு கர்நாடக சங்கீதத்திற்குள் வந்தது என்பதையும் தெரிந்து கொண்டோம். முத்துஸ்வாமி தீக்ஷிதர் ஆங்கிலேயர்களின் Band ஐ கேட்டு, நோட்டுஸ்வரம் (Celtic songs ) கீர்த்தனைகள் இயற்றியுள்ளார். அவர்தான் வயலின் கற்றுக்கொண்டு, அதை கர்நாடக இசையில் இணைத்துள்ளார்

மரபிசைப் பயிற்சிக்கு சென்று வந்தவுடன்சொல்லிவைத்தது போல் அனைவரும் கேட்கும் கேள்வி, இப்போது ராகத்தை கண்டுபிடித்து விடுவீர்களா என்பதுதான். பயிற்சி முடிந்த பின், ராகம் கண்டுபிடிப்பது மிகவும் நுட்பமான விஷயம்  என்று   தெளிவாகப் புரிகிறது . 72 மேளகர்த்தா ராகங்களில்முதல் 36 ராகங்களுக்கு சுத்த மத்திமமும், அடுத்த 36 ராகங்களுக்கு பிரதி  மத்திமமும்  தான் ஒரே வேறுபாடு. ஆசிரியர் சொன்னது போல்  கேட்பது ஒன்றுதான் வழி. ஒரு ராகத்தை 50 மணி நேரம் கேட்டால், அதன் நுணுக்கம் பிடிபடும்.

ஒவ்வொரு முறை வெள்ளி மலை வரும்போது,  ஓர்  ஆனந்த எதிர்பார்ப்பும், திரும்பும் போது ஒரு மெல்லிய சோகமும் இருக்கும். அழகிய இடம், அன்பான நண்பர்கள், அறிவிற்சிறந்த குரு, கற்கும் சூழல், செயலூக்கம் என அனைத்தும் நித்யவனத்தில் உள்ளது. இந்தக் கனவை கண்ட குரு நித்யாவிற்கும், அதை நன‌வாக்கிய உங்களுக்கும், மனதின் ஆழத்திலிருந்து நன்றி.

என்றும் அன்புடன்

S.ராஜேஷ்வரி

முந்தைய கட்டுரைபுராணமயமாதல்