மனச்சிக்கலுக்கு மாற்றுவழி

எழுத்தாளர் திரு.ஜெயமோகன் அவர்களுக்கு.

தங்கள்மனச்சிக்கலில் இருந்து விலகும் வழிகாணொளி பார்த்தேன்.மிக அருமையான எளிமையான சொல்லாடல் மூலம் ஒரு சிக்கலான உளவியல் கருத்தை பாமரனும் புரிந்து கொள்ளும் வகையில்  எடுத்து கூறினீர்கள். நன்றி.

ஓடும் மனத்தை இது போன்று சிறிது ஆறுதலானஇயற்கை சூழல் நிறைந்த  தனிமையான இடங்களுக்கு சென்று, நம் சிக்கலான உள்ளங்களை நீவி விட்டு வந்தால் பெரும்பாலான  உளச்சிக்கல்கள் தீரும். உடலுக்கு எப்படி Physiotherapy தேவைப்படுகிறதோ அதுபோல மனதிற்கு Psychotherapy தேவைப்படுகிறது. உளவியலில் துறையின்  தந்தை எனப்போற்றப்படும் அறிஞர்  சிக்மன்ட் பிராய்டு இந்த மனச்சிக்கலிருந்து விடுபட Psychoanalysis என்ற உளப்பகுப்பாய்வு முறையை கண்டு பிடித்தார்.அவருடைய முறையை தாங்கள் பாமர மக்களும் புரிந்து கொள்ளும் வகையில் எடுத்து சொன்னது அருமை.நான் ஒரு உளவியல் மாணவன். பள்ளிகளில் மாணவர்களுக்கும் ஆசிரியர்களுக்கும்  அடிக்கடி உளச்சோர்வு( Fatigue )மற்றும் மனஅழுத்தம்( Stress) ஏற்படுவது சகஜம்.அவர்களுக்கு நீங்கள்  பரிந்துறைத்த Retreat என்ற கருத்துரு மிக பயனளிகும்.தலை முடியை நீவி  சிக்கெடுக்கும் அன்றாட தனிமனித சுகாதாரம் போல மனசிக்குகளையும் நாம் இதுபோன்ற Retreat தலங்களுக்கு சென்று உள்ளங்களை நீவி மனச்சிக்கை அடிக்கடி  சரி செய்து  நேரமைக்க வேண்டும்.இந்த அவசரமான கால கட்டத்திற்கு இது போன்ற Retreat மிக மிக   அவசியம் .இதற்கு நீங்கள் கொடுத்த வரலாற்று உதாரணங்கள் உளவியல் சம்மந்தமானது எளிதில் புரிந்து கொள்ளும் வகையில் இருந்தது.

ஒரு தேர்ந்த உளவியலாளர் செய்ய வேண்டிய கருத்தை மிக இலகுவாக தங்களுக்கே உரிய பாணியில் கூறியது முத்தாய்ப்பு.

நீங்கள் தேர்தெடுத்த இயற்கைச்சூழல் ரம்மியமான இடம் மற்றும் உங்கள் வருணணை அழகு.

நன்றி.

மீண்டும் இது போன்ற  காணொளிகளை எதிர்பார்க்கிறேன்.

சிதம்பரம்

தோவாளை

முந்தைய கட்டுரைகடிதங்கள் எழுதுபவர் யார்?