உளச்சோர்வும் உடலும்

அன்புள்ள ஜெயமோகன்,

உங்களுடைய காணொளிகளை பார்த்துக் கொண்டிருக்கிறேன். நீங்கள் அளித்த காணொளியில் உளச் சோர்வு என்பது உடல் சார்ந்த ஒன்றாக இருக்குமோ என்ற ஒரு ஊகத்தை முன் வைத்திருந்தீர்கள். உடல் சார்ந்த பல சிக்கல்கள் உண்மையிலேயே ஆழமான மனச்ர்வு நிலைகளை உருவாக்குகின்றன. எப்போதுமே அதற்கு நாம் ஒரு கொள்கையை அல்லது சிந்தனை சார்ந்த விஷயத்தையே பதிலாக சொல்வோம். என்றாலும் பெரும்பாலும் மனச்சிக்கல்களுக்கான தீர்வுகள் உடல் சார்ந்தவயாகவே உள்ளன .

உடல் உண்மையில் உள்ளத்தை சோர்வடையச் செய்து விடுகிறது. உடல் நோய்க்கான காரணங்களை உள்ளம் கற்பித்துக்கொள்ள செய்கிறது .காசநோய் கொண்டவர்கள் பல வகையான எதிர்மறை நம்பிக்கைகளை உருவாக்கிக் கொள்வார்கள், அதன் வழியாக காசநோய் பெருகும் என்று ஓமியோபதி சொல்கிறது.

இதைப்பற்றி ஹோமியோபதி மிகவும் விரிவாகவே பேசி இருக்கிறது. உள்ளச் சோர்வு என்பது உடலை சார்ந்தது என்பது ஹோமியோபதியின் கொள்கைகளில் ஒன்று.

உங்களுடைய உரை சிறப்பாக இருந்தது நன்றி

சிவக்குமார் முருகேசன்

முந்தைய கட்டுரைதியானம் அளித்த கொடைகள்