நித்யாவின் ஆசி.

அன்புள்ள ஜெ

குரு நித்யா காவியம் முகாமில் நிகழ்ந்த உரையாடல்கள்  பற்றி நண்பர்கள் சொல்லி கேள்விப்பட்டேன். இந்த முறை நான் வருவதற்காக பதிவு செய்திருந்தேன். வர முடியாமல் ஆகி விட்டது. இன்றைய அலுவலகங்களின் நெருக்கடிகளை பற்றி புலம்பினால் அது ஒரு சரியான காரணமாக இருக்க முடியாது. ஏன் என்றால் தலை போகிற காரியங்களை எல்லாம் ஒரு பக்கம் வைத்துத்தான் என் நிறையபேர் இதில் எல்லாம் கலந்து கொள்கிறார்கள். ஆனால் நாமே சென்று சிக்கிக் கொள்ளும் பொருளாதார நெருக்கடிகள், அதன் விளைவான கடமைகள் ஆகியவை நாம் எதை விரும்புகிறோமோ அதை எல்லாம் செய்ய முடியாமல் நம்மை ஆக்கி விடுகின்றன என்பது ஒரு உண்மை. யாரையும் குறைசொல்வதற்கில்லை.

காவியம் முகாமிலே கவிதை சிறுகதை நாவல் என்று வெவ்வேறு களங்களிலே தீவிரமான உரையாடல் நிகழ்ந்ததாகவும் அந்த உரையாடலை விட வெளியே ஒவ்வொரு எழுத்தாளரிடமும் தனித்தனியாக சந்திப்பதும் அவர்க்ளுடன் தீவிரமான உரையாடலை நிகழ்த்துவதும் ன்னும் தீவிரமானதாக இருந்ததாகவும்சொன்னார்கள். குறிப்பாக பெண்களுக்குள் நடந்த உரையாடல் பற்றி மிகச் சிறப்பாகச் சொல்லிக் கேள்விப்பட்டேன்.

குரு நித்யாவின் ஆசி அவர்கள் அனைவருக்கும் கிடைக்க வேண்டும்.  இத்தகைய விழாக்கள் தொடர்ந்து நடக்க வேண்டும்அடுத்த ஆண்டாவது கலந்து கொள்ள வேண்டும் என்று விரும்புகிறேன்.

எம்.நடராஜன்

முந்தைய கட்டுரைஆலயக்கலைப் பயிற்சி