பக்தியும் இந்தியாவும்.

 

அன்புள்ள ஜெயமோகன்,

உங்களுடைய காணொளியில் பக்தி இயக்கம் பற்றிய ஒரு குறிப்பை அளித்திருந்தீர்கள். இந்திய பக்தி இயக்கம் என்பது வட இந்தியாவை எவ்வளவு பெரிய அழிவுக் காலத்தில் இருந்து காப்பாற்றி இருக்கிறது என்பது சாதாரணமான ஒன்று அல்ல. தென்னிந்தியர்களுக்கு அதன் தீவிரம் புரியாது என்று நினைக்கிறேன்.

இந்தியா ஆக்கிரமிப்புக்கு ஆளாகி, கோயில்கள் இடிக்கப்பட்டு மக்கள் பல்வேறு வகையில் சிதறுண்டு போன ஒரு காலகட்டத்தில் அவர்கள் பக்தியை உறுதியாக பிடித்துக் கொண்டார்கள். எங்கும் எப்போதும் அமர்ந்து கைதட்டி பாட ஆரம்பிப்பார்கள். அது அவர்களுக்கு மதமாக இருந்தது. கோயில் இல்லாத இடத்தில் பஜனை அவர்களை காப்பாற்றியது. அந்த பஜனை சம்பிரதாயத்தின் அடிப்படையாக அமைந்தது பக்தி இயக்கம்தான்.

மிகப்பெரிய பாடகராகிய ஜெயதேவரில் தொடங்கி துக்காராம் கபீர் வரையிலான அனைவருமே பஜனையை முன்வைத்தவர்கள்தான். இன்றும் துக்காராமின் பாடல்கள் தெருத்தெருவாக ஒலித்துக் கொண்டிருக்கின்றன. பக்தியை பற்றிய ஒரு சிறு அறிமுகத்தையாவது இன்றைய தலைமுறைக்கு உங்கள் காணொளி அளிக்கும் என்று நினைக்கிறேன்.

எம்.பக்தவத்ஸலம்

முந்தைய கட்டுரைஇயல்வது, கடிதம்.