அன்புள்ள ஜெ
மகிழ்ச்சிக்கான வழி என்ற காணொலியை நான் பலமுறை பார்த்தேன். உங்கள் உரைகளில் நீங்கள் நேரடியாக நம் மனதைப்பார்த்துப் பேசுவதுபோன்ற ஒரு தொனி உள்ளது. சுயமுன்னேற்ற உரையாளர்கள் போல வெற்றியாளர்களின் கதைகள், மேற்கோள்கள் என்று சொல்லாமல் உங்கள் வாழ்க்கையை மட்டும் முன்வைத்துப் பேசுகிறீர்கள். உங்கள் வாழ்க்கையின் இருட்டில் இருந்து எப்படி வெளிவந்தீர்கள் என்று சொல்கிறீர்கள்.
தமிழ் எழுத்தாளர்களில் நீங்களும் தேவதேவனும் மட்டுமே அனைத்துக்கும் அப்பால் இந்த வாழ்க்கையிலுள்ள பேரின்பங்கள் சிலவற்றைப் பற்றிப் பேசுகிறீர்கள் என நினைக்கிறேன். வேதனைகளையும் கசப்புகளையும் எல்லாம் நீங்கள் மிக விரிவாக எழுதியுள்ளீர்கள். ஆனால் அவற்றிலிருந்து மேலெழும் வழிகளைப் பற்றியும் அற்புதமான ஒரு தெளிவுடன் பேசுகிறீர்கள்.
இந்தக் காணொலிகளை ஆசிரியர்கள் தங்கள் மாணவர்களுக்கு அறிமுகம் செய்யவேண்டும். இன்றைய மாணவர்களுக்கு எதிர்மறைச் செய்திகள், எதிர்மறை ஆளுமைகள் மட்டுமே அறிமுகமாகிறார்கள். அடிக்கணும் உடைக்கணும் என்றே பேசிக்கொண்டிருக்கிறார்கள். ஒருவர் தனக்கான மகிழ்ச்சியை தானே தேடிக்கொள்வது எப்படி என்று இளமையிலேயே அறிமுகமாவது மிகமிகச் சிறந்த விஷயம். அது அளிக்கும் ஒளி முழு வாழ்க்கைக்கும் உதவும். வாழ்க்கை போன பின் அதை அறிந்து பயனில்லை.
ஆ.மாதவராஜ்










