ஈழப்போரும் சமூகவலைத்தள வசைகளும்

அன்புள்ள ஜெ,

உங்களுடைய காணொளியிலே இலங்கைப் பிரச்சனை பற்றி ஒரு குறிப்பு வருகிறது. இலங்கையின் அரசியல்வாதிகள் அனைவரும் இணைந்து 2009ல் இலங்கை அரசு தமிழர்களுக்கு எதிராக செய்தது போர்க்குற்றம் என்ற நிலைப்பாடு எடுத்திருந்தால் அதை அவர்கள் ஐநா வரைக்கும் கொண்டு சென்று ஓரளவு ஏற்க வைத்திருக்க முடியும், அதன் வழியாக நிவாரணம் பெற்று இருக்கவோ அல்லது காணாமல் ஆனவர்களைப் பற்றிய விளக்கங்களை பெற்றிருக்கவோ முடியும் என்று சொல்லி இருந்தீர்கள். இலங்கையிலே நடந்தது இனப்படுகொலை என்ற நிலைப்பாடு எடுக்கும் போது பெரும்பாலும் அது உலக அளவில் எந்த நாடாலும் ஏற்கப்பட வாய்ப்பில்லை, ஐரோப்பா போன்ற நாடுகள் இலங்கையில் நடந்தது உள்நாட்டு போர் என்ற நிலைபாடு எடுக்கும்போது இனப்படுகொலை என்பதை அவை ஏற்க வாய்ப்பில்லை  என்று நீங்கள் சொன்னது இன்று நிரூபணம் ஆகிவிட்ட ஓர் உண்மை. ஆனால் அன்று இனப்படுகொலை என்றால் என்ன என்று உங்களுக்கு இலக்கணப்பாடம் எடுத்தனர் சிலர்.  நீங்கள் சொல்வது போல உண்மையிலேயே இனப்படுகொலை என்ற அதீத நிலைப்பாடு எடுக்கப்பட்டதே அந்த தாக்குதல்களை தமிழர்கள் மேல் நடத்திய இலங்கை ஆதிக்கவாதிகளை பாதுகாப்பதற்கான மறைமுக உத்திதானோ என்று எண்ணுவதற்கு கூட வாய்ப்பு இருக்கிறது .ஆனால் நீங்கள் சொன்னதை இலங்கையில் எந்த அநீதியும் நிகழவில்லை என்று நீங்கள் சொன்னதாக சிலர் இங்கே சமூக வலைத்தளங்களில் பரப்பிக் கொண்டிருந்தார்கள். சமூக வலைத்தளம் என்பது ஏன் ஒரு  மனநோய் வட்டம் என்று நீங்கள் சொல்கிறீர்கள் என்பது அந்த காணொளியை பார்க்கும் போதுதான் புரிந்தது.

கிருஷ்ணகுமார்

முந்தைய கட்டுரைகனவுகாணத் தெரியுமா?