நாம் வரலாறற்றவர்களாக ஆகிறோமா?

அன்புள்ள ஜெ,

வரலாற்று எழுத்து பற்றிய உங்களுடைய சுருக்கமான காணொளியை பார்க்க நேர்ந்தது. நான் தமிழகத்து வரலாற்றையும் பற்றி ஓரளவு ஆர்வம் கொண்டவன், அதைப்பற்றி தேர்வுகளுக்குப் பயிற்சி அளிக்கிறேன். இன்றைக்கு தமிழகத்தில் அதிகமாக பேசப்படும் வரலாற்றை இந்திய அளவில் உள்ள எந்த தேர்விலும் எழுதமுடியாது. சர்வதேச அளவில் நடத்தப்படும் எந்த ஒரு வரலாற்றுத் தேர்வுகளும் எழுத முடியாத நிலைமை உள்ளது .கேட்டால் அவர்களெல்லாம் தமிழ் வரலாற்றின் எதிரிகள் ,தமிழர்கள் தங்களுக்கு தாங்கள் எழுதிக் கொள்வது மட்டும்தான் தமிழ் வரலாறு என்று சித்திரத்தை சொல்கிறார்கள். கீழடி உட்பட எந்த ஒரு தமிழ் வரலாற்றுக்கும் எந்த வகையான சர்வதேச அங்கீகாரத்தையும் ஆதாரங்களை காட்டி இவர்களால் பெற முடியவில்லை .அதற்கு மாறாக தாங்கள் செய்யும் வரலாற்று திரிப்புகளுக்கு ஒரு இனவாத அடையாளத்தை தான் இவர்கள் தேடிக் கொண்டிருக்கிறார்கள். நாம் இப்படிச் சென்றால் வரலாறு இல்லாதவர்களாகக்கூட உலகத்தால் அடையாளப்படுத்தப்படக்கூடும். \இந்த காணொளி அந்த வகையிலே வரலாறு என்றால் என்ன என்பதை விளக்கு ஒரு அருமையான பேச்சாக இருந்தது.

ராம் கிருஷ்ணகுமார்

முந்தைய கட்டுரைஎதிர்மனநிலை, படைப்பு- கடிதம்