தத்துவக் கல்வியின் தொடக்கம், ஓர் ஐயம்

அன்புள்ள ஜெ,
நான் உங்கள் தத்துவ வகுப்பில் பங்குபெற மிகவும் ஆர்வத்துடன் இருக்கின்றேன். ஆனால் சிலர் உங்கள் மற்றும் பலரின் புத்தகங்களை படித்து முடித்து விட்டு கலந்து கொண்டால் மட்டுமே நீங்கள் வகுப்பில் கற்றுத் தருவது புரிந்து கொள்ள முடியும் என்று கூறுகிறார்கள். கண்களை திறந்து எனது வாழ்வை சுவைக்கவும், ரசிக்கவும், என்னை நிதானத்துடன் வழி நடத்த உங்கள் தத்துவ முகாம் மிகவும் பயனுள்ளதாக இருக்கும் என்று நினைக்கிறேன். நான் படிக்க தொடங்கி தற்போது தான் திசை அறிந்து பயணித்து கொண்டு இருக்கிறேன். நான் முகாமில் கலந்து கொள்ளலாம் மா?
– லதா
அன்புள்ள லதா
இந்த வகுப்புகளில் கலந்துகொள்ள ஒரே தகுதிதான், ஆர்வம் மற்றும் கவனம். இது ஒரு முகாமில் சுமார் 15 மணிநேரம் நிகழும் வகுப்பு. அதில் கவனிக்க உண்மையாகவே முயலவேண்டும், அவ்வளவுதான். முன்தயாரிப்போ வேறு தகுதிகளோ தேவை இல்லை. அடிப்படையான , தொடக்கநிலையாளர்களுக்கான வகுப்புகள் இவை.
ஏற்கனவே, மிகத் தொடக்கநிலையிலுள்ள பெண்கள் பலர் கலந்துகொண்டு நான்காவது வகுப்பு வரை வந்துள்ளனர். எவரும் இது வரை விட்டுச் செல்லவில்லை. அனைவருக்கும் ஊக்கமூட்டும் கல்வியனுபவமாகவே இவ்வகுப்புகள் உள்ளன.
வருக
ஜெயமோகன்
முந்தைய கட்டுரைமுழுமைக்கல்வியில் அரசியல் தேவையா?
அடுத்த கட்டுரைநித்யாவை முன்வைக்கிறோமா?