இந்திய தத்துவம், மேலைத்தத்துவம்.

 

அன்புள்ள ஜெயமோகன்,

உங்கLள் லண்டன் உரை இந்திய தத்துவத்தையும் மேலே தத்துவத்தை ஒப்பிட்டு நிகழ்த்தப்பட்டுள்ளது .எனக்கு நீண்ட காலமாக இருந்து வந்த பல சந்தேகங்களை தீர்த்து வைப்பதாக இது உள்ளது. இந்திய தத்துவம் ஆன்மா, பிரம்மம் ஆகியவற்றை பற்றி மட்டுமே பேசும்போது மேலைத் தத்துவத்தில்தான் மனிதனின் உலகிய்ல் இருப்பு, மனித்உறவுகளுக்கான அடிப்படைகள், ஒழுக்கம் சார்ந்த அடிப்படைக் கேள்விகள் ஆகிய் எவ்வளவோ விஷயங்கள் பேசப்பட்டுள்ளன.  அரசு, அதில் மக்களின் பங்கு, அதிகாரம் செயல்படும் விதம், ஒரு மனிதனின் உள்ளம் இன்னொரு மனிதரிடம் தொடர்பு கொள்ளும் முறை, மொழிக்கும் மனிதனுக்மான் உறவு போன்ற் எவ்வளவோ கேள்விகள் இன்று நாம் எதிர்கொள்ளும் தத்துவ்ப்பிரச்சினைகள். இவையெல்லாம் இந்திய் தத்துவத்தில் ஏன் இல்லை என்று நான் முக்கியமான ஒரு இந்திய சொற்பொழிவாளரிடம் கேட்டேன். அவர் மேலைத் தத்துவம் தேவையற்ற உலகியல் விஷயங்களை பேசுகிறது, இந்திய தத்துவம் அடிப்படையான தெய்வம், பிரம்மம், ஆன்மா ஆகியவற்றை பற்றி மட்டுமே பேசுகிறது என்று சொல்லி; இந்திய தத்துவமே உயர்ந்தது என்று எனக்கு பதில் சொன்னார் .அந்த பதில் எனக்கு திருப்தி அளிப்பதாக இல்லை. உங்கள் இந்த உரை எனக்கு திட்டவட்டமான ஒரு பதிலை தருகிறது. நன்றி.

ஆர்.மணிகண்டன்

முந்தைய கட்டுரைமூடுபனியும் ஆழ்வார்களும்