மதம், கடவுள் – கடிதம்

ஆசிரியருக்கு,

சூரியகாந்தி சதீஸ்குமார் தங்களுக்கு எழுதிய ஐயப்பாடு கடிதம் பார்த்தேன்.இப்போதுதான் ஏன் முழுமையறிவு தேவைப்படுகிறது என புரிந்து கொண்டேன்.கடவுள் என்ற இருப்பு நிலையை விளக்க இருப்புநிலையிலிருந்து தொடங்க வேண்டும். Known to the unknown. நான் கல்லூரில் பயிலும் காலங்களில் கணிதத்தை விளக்க Let’s assume என்று ஒரு கணித தேற்றத்தை (Theory) விளக்க ஆரம்பிப்பார்.அதன் மூலம் கடைசியில் அந்த சமநிலைப்பாட்டை உறுதி செய்வார்கள்.கடவுள் தன்மையும் அவ்வாறே.

பூகோளத்திலும் கற்பனையான கோடுகளை, அட்ச ரேகை,தீர்க்க ரேகை கோடுகளை பூமி மீது கற்பனையாக வரைந்து கண்ணில் தென்படாத கால நேரத்தை கணக்கிடுகிறோம்.சென்னை சமஸ்கிருத கல்லூரி பேராசிரியர்.பிரம்மஸ்ரீ மணி டிராவிட் அவர்ளின் வகுப்புகள் வலைதளத்தில் கிடைக்கிறது. இல்லாத ஒன்றை எப்படி இருப்புநிலையில்இருக்கிறது  என்பதை அருமையாக தமிழில் விளக்குகிறார்.இது தர்க்க சாஸ்திரம்.

இரு வேறு முரண்பட்ட இரண்டு பேர்களின் கருத்துக்களையும் தர்க்க ரீதியாக இருவருமே  மறுக்கலாம்.ஆனால் ஒரு உண்மையை உணர எந்தவிதமான Preconditioned mind இல்லாமல் அணுக வேண்டும். சைவத்தில் இதை  சுத்தமனம் என்பார்கள்.அது எந்த கருத்தானாலும் சரி.சம காலத்தில் சுவாமி சங்கரானந்தா என்று அழைக்கப்படும் கோவையைச்சார்ந்நந பேராசிரியர். மணி, விஞ்ஞானத்தில் டாக்டர் பட்டம் பெற்றவரும் கூட.. அருமையான ஆன்மீக வகுப்பை நடத்தி வருகிறார்.வலைதளத்தில் கிடைக்கின்றன.கடவுளின் இருப்புநிலை மறுப்பதிலும்,ஏற்பதிலும் அவரவர் புரிதலில் உள்ளது.

தேடல் புரிதலுக்க அடிப்படை.

தட்டுங்கள் திறக்கப்படும்.கேளுங்கள் தரப்படும்

தா.சிதம்பரம்

முந்தைய கட்டுரைசிந்தனைகளின் பாதிப்பு, கடிதம்
அடுத்த கட்டுரைதத்துவக் கல்வியும் அறிவியல்களும்