உருது இலக்கிய வகுப்புகள்,ஒரு கேள்வி

அன்புள்ள ஜெ

உருது இலக்கிய வகுப்புகள் அறிவிக்கப்பட்டுள்ளன. உங்கள் காணொளியையும் பார்த்தேன். மிக அவசியமான கல்வி என்பதில் ஐயமில்லை. நான் ராணுவத்தில் பணியாற்றிய காலகட்டத்தில் உருது இலக்கிய அறிமுகம் உருவானது. என் நண்பர் ஃபெய்ஸ் அகமது ஃபெய்ஸ் கவிதைகளை வாசித்துக்கொண்டே இருப்பார். நான் இன்றும் உருது கவிதைகளின் பெரிய ரசிகன். அது பாரசீகமொழியின் குழந்தை. மிரஸா காலிப்பின் சில வரிகள் என் நினைவிலேயே உள்ளன.

ஆனால் தமிழில் அந்த ஆர்வத்தை பொதுவாக என்னால் காணமுடியவில்லை. இங்கே எவர் உருது இலக்கிய வகுப்புக்கு வருவார்கள் என்ற சந்தேகமும் உள்ளது. எப்படியானாலும் அப்படி ஒரு வகுப்பு நிகழவிருப்பதே சிறந்த விஷயம்தான். வாழ்த்துக்கள்.

ஜி.கே.ஆர். ராமஸ்வாமி

அன்புள்ள ராமசாமி

இந்த வகுப்புகளை தேர்ச்சிகொண்ட ஆசிரியர்களைக்கொண்டு நடத்தவேண்டும், அவை நிகழ்கின்றன என்று இருக்கவேண்டும்இவ்வளவுதான் என் எண்ணம். ஏனென்றால் இன்று இவை இங்கே இல்லை என்பதே மிகப்பெரிய குறையாக உள்ளது. 

நான் தனிப்பட்ட முறையில் கலந்துகொள்ள விரும்பும் வகுப்புகளிலொன்று இது. உருது இலக்கிய அறிமுகம் என்பது இந்திய அளவில் எனக்கு பலருடனான உரையாடல்வெளியை திறக்கும் என்பதை அறிகிறேன்.

ஜெ

முந்தைய கட்டுரைமந்தாரை- கடிதம்
அடுத்த கட்டுரைதத்துவக்கல்வி, கடிதம்