வைணவ இலக்கிய அறிமுகம் -ரசனை
ஜா.ராஜகோபாலன் மீண்டும் ஒரு வைணவ இலக்கிய அறிமுக வகுப்பை நடத்துகிறார்.
வைணவ இலக்கிய அறிமுகம் என்பது ஆழ்வார் பாடல்களின் கவித்துவத்திற்குள் உணர்ச்சிகரமாகச் செல்லும் ஓர் அனுபவப் பயிற்சிதான். வைணவ இலக்கியங்களின் மொழி ஆயிரமாண்டு தொன்மையானது. ஆகவே ஓர் ஆசிரியரின் உதவி அவற்றைக் கற்றுக்கொள்ள தேவையாகிறது.அவற்றின் தத்துவப்பின்புலத்தை உணர்வதற்கும் வழிகாட்டுதல் தேவை. அந்த வழிகாட்டுதலுடன் கூட்டாக அமர்ந்து கற்பதென்பது மிகத்தீவிரமான ஓர் உணர்வுநிலையை உருவாக்கும். ஒரு வகுப்பில் நாம் கற்றுக்கொள்ளும் வைணவ இலக்கியத்தை பல ஆண்டுகள் நூல்கள் வழியாகக் கற்கமுடியாது.
வைணவ இலக்கிய அறிமுகம் என்பது ஒரு பக்கம் பக்தி என்னும் உணர்வின் வெளிப்பாடு. இன்னொரு பக்கம் தூய தமிழ் அனுபவம். தமிழ்மரபை அறிய விரும்பும் எவரும் தவிர்க்கமுடியாத ஒன்று.
நாள் மே 30 31 ஜூன் 1
- நாலாயிரம் கடிதம்
- பிரபந்த வகுப்பு கடிதம்
- பிரபந்தக் கல்வி, கடிதம்
- நாலாயிரம் கடிதம்
- பிரபந்தம், கடிதம்
- கண்ணனை அறிதல், கடிதம்
-
வைணவம் கல்வி
-
பிரபந்த வகுப்பு கடிதம்
-
வைணவத்தை அறிதல்
-
வருமாறு ஒன்றில்லையேல்…
அறிவிக்கப்பட்ட நிகழ்வுகள்
- பறவையியல் அறிமுகம்- இடங்கள் நிறைவு
- தாவரவியல் அறிமுகப் பயிற்சிகள் இடங்கள் நிறைவு
- கர்நாடக சங்கீத அறிமுகம்- இடங்கள் நிறைவு
- ஆலயக்கலைப் பயிற்சிகள் இடங்கள் நிறைவு
வரவிருக்கும் பயிற்சிகள்
தியானம்- உளக்குவிப்புப் பயிற்சி, இரண்டாம்நிலை
தில்லை செந்தில் பிரபு நடத்தும் தியானம் – உளக்குவிப்புப் பயிற்சிகள் இன்றைய தலைமுறையில் தங்கள் அன்றாட வாழ்க்கையிலும் தொழிலிலும் கவனம்குவிக்கமுடியாத அகச்சிதறல் கொண்டவர்களுக்கும், மெய்யியல் நோக்கில் வாழ்க்கையை அமைத்துக்கொள்ள விழைபவர்களுக்குமாக குறிப்பாக வடிவமைக்கப்பட்டவை. நவீன முறையைச் சேர்ந்தவை. தில்லை இந்த தியானப்பயிற்சியை வெவ்வேறு புகழ்பெற்ற அமைப்புகளைச் சார்ந்து சென்ற 20 ஆண்டுகளாக அளித்து வருபவர். பல்லாயிரம் மாணவர்கள் அவருக்கு உள்ளனர். இந்த பயிற்சி அவர்களின் வாழ்க்கைக்கு வழிகாட்டியுள்ளது.
இது மதம்சார்ந்த பயிற்சி அல்ல, இந்து பௌத்த மரபுகளில் இருந்து உருவானது எனினும். ஒருவர் தன் அகத்தை திரும்பி நோக்கவும், அதன் கட்டற்ற பாய்ச்சலை புரிந்துகொள்ளவும், அதை தனக்கேற்றவகையில் பழக்கிக்கொள்ளவும் உதவும் முறைமைகள் இவை. தொன்மையானவை, நவீனப்படுத்தப்பட்டவை.
முந்தைய தியான வகுப்புகளில் கலந்துகொண்டவர்களுக்கான இரண்டா
நாள் ஜூன் 6 7 மற்றும் 8
இந்திய தத்துவம் நான்காவது நிலை
இந்திய தத்துவம் நான்காவது நிலை மே மாதம் நடைபெற்றது. அதில் மூன்றாம் நிலை முடித்தவர்கல் கலந்துகொண்டனர். எஞ்சியவர்கள் இதில் கலந்துகொள்ளலாம்
நாள் ஜூன் 20 21 மற்றும் 22