ஆங்கில வகுப்புக்கு வந்தவர்கள் தமிழில் தொடரமுடியுமா?

அன்புள்ள ஜெயமோகன்,

ஆங்கிலத்தில் இந்து தத்துவ அமைப்புகளை நடத்தும் செய்தியை அறிந்து கொண்டேன். இந்த வகுப்புகளை நான் தமிழில் கற்க வேண்டும் என்று நினைத்தேன் .எனக்கு தமிழ் நன்றாகவே தெரியும். ஆனால் இப்போது முதல் வகுப்பு நடக்கவில்லை என்பதனால் இந்த தத்துவம் வகுப்பு ஆங்கிலத்தில் நடப்பதில் கலந்து கொள்ளலாம் என்று நினைக்கிறேன். இந்த வகுப்புக்கு பிறகு நான் மீண்டும் தமிழில் எனக்கு வகுப்புகளில் கலந்து கொள்ளலாமா அல்லது ஆங்கில வகுப்புகளில் மட்டும் தான் கலந்து கொள்ள முடியுமா?

என்.ஆர்.மகாதேவன்

அன்புள்ள மகாதேவன்,

இந்த ஆங்கில வகுப்புகள் ஆங்கிலம் மட்டுமே தெரிந்த பிறமொழியினருகாக முதன்மையாக எடுக்கப்படுகின்றன. ஆனால் தமிழ் தெரிந்தவர்கள் உடனடியாக தமிழ் முதல் வகுப்புக்கு வர முடியாத நிலையில் பலர் இதில் கலந்து கொள்கிறார்கள்.

தமிழ் தத்துவ முதல் வகுப்பு உடனடியாக தொடங்கும் எண்ணம் இல்லை. ஏனெனில் தொடங்கப்பட்ட வகுப்புகளை மேற்கொண்டு கொண்டு சென்று சேர்ப்பதில் பெரும் சுமை உள்ளது. பல வகுப்புகள் தொடர்ந்து தாமதம் ஆகின்றன .தொடர்ச்சியாக முதல் வகுப்பை மட்டுமே அறிமுகம் செய்து கொண்டிருந்தால் அந்த வகுப்புகள் முழுமையாக சேர்ந்து முடிக்க முடியாத நிலை ஏற்படும். இப்போது தத்துவ முகாமின் ஏழு எட்டு நிலைகளை நோக்கி நடந்து கொண்டிருக்கும் நிலை உள்ளது. ஆகவே முதல் நிலையை  உடனடியாக தமிழில் தொடர்ந்து நடத்துவதாக இல்லை. ஆனால் ஆங்கில முதல் நிலை நடக்கும் அதன்பிறகு ஆங்கிலத்தில் இரண்டு மூன்று நிலைகள் நடக்கும்.

ஆங்கிலவழி முதல் வகுப்பிற்கு வந்தவர்கள் தமிழில் இரண்டு அல்லது மூன்றாம் வகுப்பு எதிலும் கலந்து கொள்ள முடியும். அது அவர்களின் வசதியை பொருத்தது.

ஜெ

முந்தைய கட்டுரைதத்துவத்தின் தடைகள்