அன்பு ஜெயமோகன்,
உங்கள் காணொளிகளை தொடர்ந்து பார்த்துக் கொண்டிருக்கிறேன். இந்த காணொளிகளில் சிலவற்றில் மட்டும் நீங்கள் விசித்திரமான புதிய ஊர்களில் ,புதிய நிலங்களில் தோன்றுகிறீரகள். அவற்றில் விரிவான சாவகாசமான உரையாடல் இருப்பதில்லை. ஆனால் அந்த இடத்தில் இருப்பதன விளைவான் ஒரு ஒரு விதமான பிரகாசமும், அந்த இடத்தில் தோன்றும் ஒரு புதிய சிந்தனையும் உள்ளன.
பொதுவாக அந்த வகையான காணொளிகளை அதிகமானவர்கள் பார்ப்பதில்லையோ என்ற் எண்ணம் எனக்கு உண்டு.அந்த காணொலிகளின் பார்வையாளர்களின் எண்ணிக்கை பார்க்கும்போது அப்படித் தோன்றுகிறது. பார்வையாளர்கள் திரும்பத் திரும்ப அவர்களுடைய அன்றாட, சாதாரண வாழ்க்கையில் பிரச்சனைகளையும் தீர்வுகளையும் சொல்லும் காணொளிகளைத்தான் அதிகம் விரும்புகிறார்கள். பெரும்பாலும் மனச்ச்சிக்கல்களுக்கான வழிமுறைகள், உள்ளம் சிதறுவதற்கான மாற்று வழிகள் போன்ற சிலவற்றுக்குத் தான் அதிகமான பார்வையாளர்கள் இருக்கிறார்கள்.
ஆனால் இந்த வகையான காணொளிகள் தான் ஏதோ ஒரு வகையில் முக்கியமானவை. இவற்றில் ஒரு கலைஞன் புத்தம் புதிய வகையில் நிகழ்வது நடக்கிறது. அது சாதாரணமான ஒன்று அல்ல .அந்த நிலமும் அங்கு சென்று சொல்லப்படும் சொற்களும் மிக ஆழமாக நமக்குள் செல்லபவை .நான் திரும்பத் திரும்ப இந்த காணொளிகளைத்தான் பார்த்துக் கொண்டிருக்கிறேன். நேபாளத்தில் அல்லது அதன் அருகில் ஓர் இடத்தில் புத்தர் சிலையின் அருகில் நின்று நீங்கள் பேசும் ஒரு காணொளியும் ஒரு அழகிய நிலப்பசுமையின் முன்னால் நின்று பேச காணொளியும் எனக்கு மிகவும் நெருக்கமானவை.
ஜெயகரன் ராஜா









