நவீன மேலைத்தத்துவ அறிமுக வகுப்புகள்.

மேலைத் தத்துவம்- ஜெர்மானிய தத்துவம் அறிமுகம்

அஜிதன் நடத்தும் மேலைத்தத்துவ அறிமுக வகுப்புகள் புகழ்பெற்றவை. இன்றைய நவீன வாழ்க்கையை, இன்றைய தொழில்நுட்பக் கொள்கைகளை, இன்றைய வணிகக்கொள்கைகளை, இன்றைய அரசியலை புரிந்துகொள்ள உதவும் அடிப்படைகள் கொண்டது நவீன ஐரோப்பியத் தத்துவம்.

சாக்ரடீஸ் காலத்தில் தொடங்கும் எளிய அறிமுகத்துக்குப் பின் ஷோப்பனோவர், இமானுவேல் காண்ட், ஹெகல், நீட்சே வழியாக இன்றைய சிந்தனையாளர்கள் வரை அறிமுகம் செய்யும் அஜிதனின் இந்த வகுப்புகள் போல இத்தனை விரிவான நவீன அறிமுகம் இன்று வேறெங்கும் அளிக்கப்படுவதில்லை.

உண்மையில் நாம் எப்படி சிந்திக்கிறோம் என்பதை அறியவே நவீன மேலைத்தத்துவ அறிமுகம் தேவை. அண்மையில் லண்டனில் நிகழ்ந்த இவ்வகுப்பு வரும் ஏப்ரலில் அமெரிக்காவில் கலிஃபோர்னியாவிலும் நிகழவுள்ளது.

ஓர் இந்திய இளைஞனுக்கு ஐரோப்பிய சிந்தனை, ஐரோப்பிய வாழ்க்கை ஆகியவற்றை பற்றிய மெய்யான அறிமுகத்தை உருவாக்கிக்கொள்ள மிகச்சிறந்த வழி இந்த வகுப்புகள்.

நாட்கள் மார்ச் 20 21 மற்றும் 22

விண்ணப்பிக்க For contact [email protected]

அறிவிக்கப்பட்ட வகுப்புகள்- இந்து தத்துவ வகுப்புகள்

இந்து தத்துவம் ஆறாவது வகுப்பு -இரண்டாம் நிலை

இந்து தத்துவத்தின் ஆறாவது வகுப்பின் முதல்நிலை மட்டும் ஒரு வகுப்பு அல்மோராவிலும் இன்னொன்று பிப்ரவரி முதல் வாரம் வெள்ளிமலையிலும் நிகழ்ந்தது. இந்த வகுப்பு அவ்விரு வகுப்புகளின் தொடர்ச்சி. இது ஆறாம் வகுப்பின் இரண்டாம் நிலை. பிரம்மசூத்திரம் முழுமையாக்கப்படும்

நாள் பிப்ரவரி 27 , 28 மற்றும் மார்ச் 1

For contact [email protected]

இந்து தத்துவம் மூன்றாம் வகுப்பு

இந்து தத்துவத்தின் மூன்றாம் வகுப்பு மார்ச் முதல்வாரம் 6,7 மற்றும் 8 ஆம் தேதிகளில் நிகழும். இந்து தத்துவம் இரண்டாம் வகுப்பு முடித்தவர்கள் கலந்துகொள்ளலாம்

For contact [email protected]

இந்து தத்துவம் ஏழாவது வகுப்பு

ஆறு தரிசனங்களின் ஒட்டுமொத்தப் பார்வையும், அடிப்படையான சூத்திரங்களும்.

நாள் மார்ச் 13, 14 ம்ற்றும் 15

வரவிருக்கும் வகுப்புகள்

ஆலயக்கலை வகுப்பு

ஜெயக்குமார் நடத்திவரும் ஆலயக்கலை வகுப்புகள் ஓர் இயக்கமாகவே ஆகிவிட்டிருக்கின்றன. இதற்குள் பலநூறுபேர் கலந்துகொண்டிருக்கிறார்கள். கலைக்கோயில்களைத் தேடி இந்தியாவெங்கும் பயணம் செய்துகொண்டிருக்கிறார்கள்.

ஆலயக்கலை வகுப்பில் இந்திய ஆலயங்களின் கட்டுமான அமைப்பும் இந்தியச் சிற்பக்கலையும் அறிமுகம் செய்யப்படுகிறது. மூன்றுநாட்களுக்குள் நாம் அதுவரை அறியாத ஒரு புதிய உலகம் திறந்துகொள்வதை உணரமுடியும். நாம் அன்றாடம் பார்த்துக்கொண்டே இருக்கும் ஆலயங்களின் பொருள் விளங்கத்தொடங்கும். ஒருவர் எழுத்தறிவு அடைந்து, தன் முன்னோர் எழுதிவைத்த உயிலை படிப்பதுபோன்றது அது. சட்டென்று அவர் பெருஞ்செல்வத்துக்கு உரிமையாளர் ஆகிறார்.

ஆலயங்களை அறிவதென்பது மதக்கல்வி அல்ல. ஆன்மிகப் பயிற்சியும் அல்ல. அது இந்தியக் கலை மரபை அறிவது. இந்தியாவின் ஓவியம்,நடனம், இசை என அனைத்துக்குமே ஒரு தொடக்கம் அது. இந்திய வரலாற்றை, இந்தியப் பண்பாட்டை நாம் அறியத் தொடங்குகிறோம். கூடவே நம் அகம் விழிப்படைகிறது. அக்கோயில்கள் ஒவ்வொன்றும் நுண்ணிய ஆன்மிகஞானத்தின் பதிவுகள் என்பதை உணரத்தொடங்குகிறோம்.

நாள் மார்ச் 27 28 மற்றும் 29

For contact [email protected]

 

முந்தைய கட்டுரைஎதிர்ப்பும் ஏற்பும்