கனவுகாணத் தெரியுமா?

அன்புள்ள ஜெயமோகன்,

இந்தியச் சூழலில் பலருக்கும் ஓவியம் வரைவதற்கு கைத்ததிறமை தேவை என்ற எண்ணம் இருக்கிறது. இன்றைய கணிப்பொறிக்கலை வளர்ந்த பிறகு ஓவியம் வரைவதற்கு கைப்பழக்கம் போன்றவை பெரிய அளவு முக்கியமில்லை. காட்சி கச்சிதம் என்பதை அதிகமாக இன்று எவரும் கவனிப்பதும் இல்லை.ஓவியம் என்பது ஒரு திறமை அல்ல. ஒரு கனவு, கனவு காணமுடிகிறதா என்பதே கேள்வி

பழைய ஓவியங்களிலேயே பெரிய பெரிய மாஸ்டர்கள் கூட அதிகமாக அந்த ஓவியத்தின் காட்சி வடிவக் கச்சிதத்தை கவனித்ததில்லை .உணர்வுகளை வெளிப்படுத்துவது மட்டும்தான் ஓவியத்தின் முக்கியமான சவாலாக இருந்திருக்கிறது. ஓவியனின் மனதை எப்படி ஓவியம் வெளிப்படுத்தி இருக்கிறது என்பதுதான் கணக்கு.

இன்று அந்த சரியான அளவுகள் போன்றவற்றையெல்லாம் தொழில்நுட்பத்தை கொண்டு எளிதாக உருவாக்கிக் கொள்ள முடியும் .காட்சியாக நம் மனதை மாற்ற முடியுமா என்பது தான் ஓவியம் இன்று கேட்கும் கேள்வி. நம் காட்சிக்கனவு எந்த அளவு பறக்கிறது என்பதே முக்கியம்.

அதனுடைய தொடக்கமாகத்தான் இந்த பயிற்சிகள் அமைந்திருக்கிறது என்றுதான் நினைக்கிறேன் .ஆகவேதான் பங்கேற்ற அனைவருமே வரைந்திருக்கிறார்கள். மனதுக்குள் நம்முடைய உணர்வுகள், நம்முடைய கனவுகள் ஆகியவை உள்ளன. அவற்றை வெளியே நாம் எப்படி காட்சியாக ஆக்குகிறோம் என்பதே ஓவியக்கலை.
அந்த புரிதல் இருந்தால் இந்த கலைப்பயிற்சியில்அனைவருமே கலந்து கொண்டிருக்கலாம். எதிர்காலத்திலும் இளைஞர்கள் மாணவர்கள் நிறையபேர் கலந்து கொள்வார்கள் என்று நினைக்கிறேன். மாணவர்கள் இதில் கலந்துகொண்டு பயிற்சிகளை பெறுவது கவனம் குவிந்து வேலைசெய்யவும், இனிவரும் கணிப்பொறி வேலைகளை சரியாகச் செய்யவும் மிக அவசியமானதாக இருக்கும்

ஜெயராம் கணநாதன்

முந்தைய கட்டுரைகவனித்தல், திளைத்தல், வாழ்தல்.