இந்தக் கட்டுரைகள், கடிதம்

அன்புள்ள ஜெயமோகன்,

உங்கள் காணொளிகளை தொடர்ந்து பார்த்துக் கொண்டிருக்கிறேன். உங்கள் கட்டுரைகளுக்கு வருவதற்கான ஒரு சிறந்த வழி உரைகளே என்று தோன்றுகிறது. பொதுவாக நாம் கட்டுரைகள் படிக்கும் வழக்கம் இல்லாதவர்கள்.  நம்மால் ஒரு கட்டுரையை படிக்கும் போது அந்த ஆசிரியருடன் உரையாட முடிவதில்லை. அதை ஒரு பாடமாக படிப்பதற்காகத்தான் பள்ளிகளும் கல்லூரிகளும் நமக்கு கற்றுக் கொடுத்திருக்கின்றன. ஆகவே படிப்பு முடிந்தபிந் நாம் கட்டுரை படிப்பதே இல்லை.

இந்த உரையாடல்களை மக்கள் என் விரும்புகிறர்கள் என்றால் இதில் ஓர் ஆசிரியர் இருக்கிறார். அவருடன் நாம் பேசுகிறோம். இந்த கட்டுரைகளை படிப்பதற்கு முன்பு உரைகளை கேட்டு பழகிவிட்டால் கட்டுரைகளை நேரில் கேட்பது போல ஒரு நிறைவு ஏற்படுகிறது. கட்டுரைகளுக்குள் செல்வதற்கான சிறநத வழியாக இந்த உரைகளை நான் கண்டு கொண்டேன். என் நண்பர்களுக்கு அறிமுக செய்யும்போதும் இது ஒரு சிறந்த வழி என்று தெரிய வருகிறது.

இந்த கட்டுரைகளுக்காக மனமார்ந்த நன்றி.

செல்வ கணேசன்

முந்தைய கட்டுரைஅப்பால் ஓர் இடம்!