யோகமும் கவிதையும்

ஆசிரியருக்கு வணக்கம்!

சகாஎன அமைந்த அதே கல்வித் தோழனுடன் உரையாடி  அடைவது கற்றலில் மூன்றாவது கால்பங்கு என குருஜி உங்களுக்கு எழுதிய மறுகூடல் கடிதத்தில் கூறியிருந்தார். சகாவாக கவிஞர் சாம்ராஜ்  வந்து எனக்கு கொடுத்த கற்றலின் ஒரு துளி

அன்றைக்கு

அதிகாலை இருள் பிரிந்திருக்கவில்லை

நிசப்தம் காடாக விரிந்து கிடந்தது

சாரல் மழை பெய்து

சுகமான குளிர் வியாபித்திருந்தது

அயர்ந்து

தூங்கிக்கொண்டிருந்தான் பெரியவன்

அரவம் கேட்டு விழித்த சின்னவன்

சிரித்து விளையாடிக் கொண்டிருந்தது

சித்திரமாக இருக்கிறது கண்ணுக்குள்

இவள்

வெந்நீர் வைத்துக் கொடுத்தாள்

வெளுத்த துணிகளை எடுத்து வைத்தாள்

வாசல்வரை வந்து

வழியனுப்பி வைத்தாள் தாய் போல

முதல் பேருந்து

ஓட்டுநர் இருக்கைக்கு பின்புற ஜன்னலோரம்

பிழைப்புக்காகப்

பிரிந்து வந்து கொண்டிருந்தேன்

மனசு கிடந்து அடித்துக்கொள்ள

என்ற விக்கி அண்ணாச்சியின் கவிதையை குருஜி அளித்த வகுப்பு இடைவெளியில் சொல்லி,    

முதல் பேருந்து

ஓட்டுநர் இருக்கைக்கு பின்புற ஜன்னலோரம்” 

என்ற வரியில் இருக்கும் தனிமை அவரை திடுக்கிட வைத்ததை விவரித்தார்

மதுரையின் அழகர் திருவிழா கொண்டாட்டமும்அவரின் சிறு வயது தனிமையும் அறிந்த பிறகு தான் அவரின் திடுக்கிடல் எனக்கு உரைத்தது

அகமென்னும் வீடு எனும் தலைப்பில்கமலதேவி இந்த கவிதையில் இருக்கும் பிரிவுத்துயரை, ஒரு கவிஞனின் அலைகழிப்பைwww.kavithaigal.inயில்  எழுதிய போது உணர முடிந்தது.

ஒரு வரி புரிதல், கண்டராதித்தன், இசை, திருச்செந்தாழை, நாஞ்சில் நாடன், கல்யாண்ஜி, கலாப்பிரியா, உங்கள் படைப்பு என சாம்ராஜ் விவரித்ததை படிக்க தூண்டுகிறது

அழகான நினைவுகளோடு கற்றலை கொடுத்த முகாம் நண்பர்கள், மணி அண்ணா, குருஜி மற்றும் உங்களுக்கு நன்றி!

சக்தி ராஜ்

பாப்பான்குளம் 

 

அன்புள்ள சக்தி

நீங்கள் அங்கு சென்றது யோகப்பயிற்சிக்காக. கற்றுக்கொண்டது இலக்கியம். நாங்கள் உத்தேசிக்கும் முழுமையறிவு என்பது அதுதான். எல்லாவற்றையும் இணைத்துக் கற்றுக்கொள்ளும் ஒரு முழுமையான பயிற்சிமுறை. அதற்கான ஓர் இடம்

ஜெ

முந்தைய கட்டுரைகவிஞரிடமிருந்து தியானம் பயில்தல்- கடிதம்
அடுத்த கட்டுரைஓவியப்பயிற்சிக்குப் பின்…