ஓவியப்பயிற்சிக்குப் பின்…

அன்புள்ள ஜெ,

.வி. மணிகண்டனின் காட்சிக் கலை முகாமிலிருந்து பெரும் விடுதலை உணர்வைப் பெற்றேன். மேகங்களால் மூடப்பட்ட வானம் சட்டென்று தெளிவடந்தைப் போல, இப்போது அங்கே விரிந்து கிடக்கும் உலகங்களைப் பார்க்க முடிகிறது. உண்மையில் அவை கண்ணுக்குள் இருந்த மேகங்களே என்று உணர்கிறேன். உலகைப் பார்ப்பதற்கும், சிந்திப்பதற்கும், கலையை அணுகுவதற்கும் புதிய கண்களை அடைந்திருக்கிரேன். நெஞ்சில் நன்றி நிரம்ப, நான் செய்த ஓவியங்களை மகிழ்ச்சியோடு பகிர்கிறேன்.

புத்தகங்கள் அடுக்கப்பட்ட எனது நூலகத்தைப் பார்த்ததும் மின்னலாக ஒரு காட்சியை உணர்ந்தேன். அந்த புத்தகங்களின் பக்கங்களையே சரடாக ஆக்கிப் பிணைந்து ஓவியம் ஒன்றைச் செய்தேன். அதனோடு தொடர்புடையதாகச் செய்த மேலும் இரண்டு ஓவியங்களையும் இங்கே இணைத்துள்ளேன்.

சொற்கள் குவிந்த ஒரு வெளி. அதற்கு வெளியே  ஒரு வெள்ளைப் பரப்பு. அந்த வெள்ளை பல வெள்ளைகளால் ஆனது. அவை அனைத்தும் கருப்பின் மாறுபாடுகளே.

– அருண்மொழி
முந்தைய கட்டுரையோகமும் கவிதையும்
அடுத்த கட்டுரைநவீனவாசகனுக்கு பக்தி இலக்கியம் அளிப்பது என்ன?