ஆசிரியருக்கு,
Aesthetic sense, ,அழகுணர்ச்சியை,பூக்கள் மலர்வதிலிருந்து எடுத்துச்சொன்னீர்கள்.பூஷ்களம்,என்பது பொலிவதுதான்.அழகான ஒரு உணர்வை வெளிப்படுத்தும் ,கவிஞன்,ஓவியன்,நடனம்,எழுத்தாளர் என்றுமே பிறர் பார்த்து ரசிக்க வேண்டும் என்று செய்வதில்லை.அவன் இயற்கையை அதன் அழகை ரசிக்கும் விதம் தான் படைப்பு.கல்லிலே கலை வண்ணம் காண்பது ஒரு சிற்பியின் அழகுணர்ச்சி.சில நாட்களுக்கு முன் காலமாகிவிட்ட பின்னணிப்பாடகர் பி.ஜெயச்சந்திரனுக்கு மலையாளத்தில், “பாவ காயகன் “என்ற பட்டம் உண்டு.பாடல்களை பாடும் போது அவருடைய குரலின் பாவம் தனித்துவமாக இருக்கும்.அதுபோல கண்ணதாசன் கவிதை .சில திரை இசைப்பாடல்களில் அவர் வெளிப்படடுத்திய அழகுணர்ச்சி மற்ற கவிஞர்களிடம் குறைவாகவே இருந்திருக்கிறது.
சரி; இந்த அழகுணர்ச்சியை கற்றுக்கொள்ள முடியுமா,என்றால் முடியும்.ரசனை வேண்டும்.கற்றுக்கொடுக்கும் ஆசிரியருக்கும் மாணவருக்கும் ரசனை வேண்டும்.சில பேருக்கு இயற்கையாக அமைந்திருக்கும்.கம்ப இராமாயணத்தின் சுந்தரகாண்டத்தை அண்மையில் படித்தேன்.அழகுணர்ச்சி இயல்பாகவே கம்பனிடம் உண்டு.கதாசிரியர்களிடமும் உண்டு,புதுமை பித்தன், நா.பிச்சமூர்த்தி. போன்றவர்களிடம். அடிப்படையில், பூவின் அழகை ரசிக்க தெரிந்தவன் அழகுணர்ச்சி கொண்டவன் என்பதில் ஐயமில்லை.பொலிவு என்பது இயற்கை அதை வெளிப்படுத்துதல் அழகுணர்ச்சி, அது கவிதையாகவோ,எழுத்தாகவோ,இசையாகவோ,நடனமாகவோ,சிலையாகவோ இருக்கலாம்.இதை எல்லாம் விட அழகுணர்ச்சி கொண்ட ஒரு நல்ல மனம் இருந்தால் உலகை ரசிக்கலாம்,கொண்டாடலாம்.
உங்கள் முழுமையறிவு அமைப்பின் சிந்தனைகளும் அழகுணர்ச்சியின் வெளிப்பாடுதான்.Poetry is the spontaneous expression of powerful and natural feelings –
William Wordsworth.
தா.சிதம்பரம்