வகுப்புகள் மீண்டும் மீண்டும்…

அன்புள்ள ஜெ,

சௌந்தர்ஜி நடத்தும் யோகா பயிற்சி முகாம்ஜெயக்குமார் நடத்தும்  ஆலயக்கலை அறிமுக பயிற்சி முகாமில் எத்தனை முறை வேண்டுமானாலும் கலந்துக்கொள்ளலாம். ஒவ்வொரு முறை கலந்துக்கொள்ளும் போதும் புதியாக ஏதோ மனதை செய்கிறது. அப்படி தான் நான் இரண்டாம் முறையாக  ஜனவரி 24, 25 மற்றும் 26ல் நடந்த ஆலயக்கலை அறிமுக பயிற்சி முகாமில் கலந்து கொண்டேன்வழக்கமாக நம்மை தொடர்ந்து துரத்தும் வாழ்க்கையை தவிர்த்து வெள்ளி மலைக்கு வரும்போது அது ஒரு வேறு உலகமாக தெரிகிறதுகுறைந்து 30 ஆண்டுகள் பின் நோக்கி போகிறது. அடுத்து ஆசிரியர் வகுப்பு ஆரமபிக்கும் போதே மாணவர்களுடன் ஒரு பிணைப்பு உருவாவதைப் உணர்ந்தேன்நம்மை 1000 வருடங்கள் பின் நோக்கி அழைத்து செல்கிறார்

பாடல்களிலிருந்து சிற்பி கற்பனை செய்து மனதை குவித்து ஒரு உருவத்தை தத்துருபமாக அமைப்பது Avatar movieல் வரும் டைர்ஹார்ஸுடன் ஒரு நரம்பியல் இணைப்பு (neural link) உருவானவுடன், சவாரி செய்பவர் டைர்ஹார்ஸுடன் கிட்டத்தட்ட அது அவர்களின் உடலின் நீட்சியைப் போலவே தொடர்பு கொள்ள முடியும்  போல ஒரு காட்சி, அதுப் போல சிற்பிகளின் வேலைப்பாடுகள் மெய்சிலிர்க்க வைக்கிறது.

வழக்கமாக கோவிலுக்கு செல்வது பெயருக்காக ஒரு சுற்று  வந்து விடுவது என்பது போல தான் இருந்த ஒரு பழக்கத்தை மாற்றி வேறு ஒரு பார்வையய் ஆசியர் ஜெக்குமார் காட்டினார். இன்று காலை காலையில் டீ குடித்து சென்றேன் அங்கு ஒரு லட்சுமியின் படம் இருந்தது. அதைப் பார்த்தவுடன்  எந்த ஆசனத்தில் இருக்கிறார்அவரது கைகள் அபயகஸ்தமா அல்லது வராதஹஸ்தமா என்று கண்கள் ஆராய தொடங்கிவிட்டன. அவரின் ஆபரணம், கையில் வைத்திருக்கும் ஆயுதங்கள் என்ன என்று யோசிக்க ஆரம்பித்தவுடனே ஆசிரியர் வகுப்பில் சொன்னது  “இந்த வகுப்பிற்க்கு பிறகு நீங்கள் கோயிலுக்கு செல்ல வேண்டியதில்லை கோயில் உங்களுக்குள் வந்துவிடும்”  என்று கூறியது நினைவிற்க்கு வந்தது

அத்தனை பெயர்களையும்  நினைவில் வைத்துக் கொண்டு ஒரு சிற்பத்தை பார்த்தால் அது மேலும் பல புரிதலைக்கொடுக்கும் ஆனால் என் நினைவில் நின்றவை எல்லாம் உபபீட்ம், ஆதிஷ்டானம், பாதவர்கம், பரஸ்தாரம், கண்டம்ஷிகரம், ஸ்துபி  மற்ற எல்லா பெயர்களும் மனதில் நிற்க வேண்டும் என்றால் அதற்கு ஆசிரியர் போல குறைந்தது பத்து ஆண்டுகள் செலவிட்டால்தான் ஒருளவுக்கு சிற்பத்தை புரிந்திக்கொள்ள முடியும்.

யோக வகுப்பை தொடர்ந்து தியானப் பயிற்சியை முடித்திவிட்டு (ஆறு மாதக் காலம் தொடர்ந்து செய்ய வேண்டும்) பிறகு ஆலயக்கலை அறிமுக வகுப்பில் கலந்துக் கொண்டால் கவன சிதறல்களை குறைத்து மனதை ஒருமுகப்படுத்தினால் குறைந்தது  இரண்டு ஆண்டுகள் கோயில்களுக்கு சென்று சிற்பத்தை பார்த்து வந்தால்ஒரு சிறிய அறிமுகம் கிடைக்கும் என்பதில் எந்தவித ஐயப்பாடும் இல்லை.

இந்த அரிய வாய்ப்பினை அமைத்துக் கொடுத்த உங்களுக்கும்,   அந்தியூர் மணி அண்ணாவின் அரவணைப்பிற்கும்  மிக்க நன்றி.

சர்வா

முந்தைய கட்டுரைமரபிலக்கியம் என்னும் மகிழ்வு
அடுத்த கட்டுரைஆலயஞானம்