ஆலயஞானம்

ஆசான் ஜெயமோகனுக்கும் ஆலக்கலை வகுப்பின் ஆசிரியர் ஜெயக்குமார் அவர்களுக்கும் நமஸ்காரம்.

வெகுநாட்களுக்குப் பிறகு என் நேரத்தை பயனுள்ளதாக செலவளித்துள்ளேன் என்பதில் எனக்கு மகிழ்ச்சி. பல வருடங்களாக தேடிய அறிவுச்செல்வத்தை இரண்டரை நாட்களில் பாலடையில் வைத்து புகட்டிய தாயுள்ளம், இத்தனை குறிப்புகளும், பெயர்களும், முகச்சுளிப்பற்ற பதில்களும்ஜேகே சார்நீங்கள் பொறுமையின் மறுவுருவம்.

சிறுவயது முதலே மன்னர் ராஜராஜனின் மீது கொண்ட பிரேமையால் தஞ்சை பெருவுடையார் கோயில் பிரகாரங்கள் தொடங்கி இண்டு இடுக்குகள் வரை கண்டு தனித்து நின்று பேசி காலமறியாது மயங்கி நின்றிருக்கிறேன்.

இன்று ஜேகே சாரின் ஆலயக்கலை வகுப்பு முழுவதும் நான் சிலிர்த்து ஆச்சர்யப்பட்டு ஆர்வமுடன் ஒவ்வொரு சொல்லையும் புகைப்படத்தையும் அள்ளி விழுங்கிய போதும் பசி அடங்கவில்லை. அடுத்த எனது சிற்பக்கலை பயணத்திற்கான கதவை திறந்த ஜேகே சாருக்கு நன்றி.

வரும் நாட்களில் கலைப்பயணத்தை எதிர்பார்த்து காத்திருப்பேன். செல்லும் ஒவ்வொரு கோயிலும் இனி எனக்கு மிகப்பெரிய பிரசாதமே.

அந்தியூர் மணி சாருக்கு நன்றி.

உமா மகேஸ்வரி

முந்தைய கட்டுரைவகுப்புகள் மீண்டும் மீண்டும்…
அடுத்த கட்டுரைபயணத்தில் நாம் அடைவது என்ன?