இ.எம்.எஸ் என்னும் அறிஞர்

அன்புள்ள ஜெ

ஈ.எம்.எஸ் பற்றிய காணொளி நெகிழ்ச்சியானது. நீங்கள் தொடர்ச்சியாக அவரைப்பற்றி எழுதி வந்திருக்கிறீர்கள். ஆனாலும் இந்தக் காணொளியில் தெரியும் அந்த உணர்வுகள் மிக அருமையாக உள்ளன. உங்கள் இளமையில் உங்களை ஆட்கொண்ட பேராளுமையின் ஞானமும் வரலாற்றுப் பாத்திரமும் இன்றுவரை உங்களில் தொடர்வதைச் சொல்லியிருக்கிறீர்கள். ஈ.எம்.எஸ் என்னும் அறிஞர் ஒரு அரசியல்வாதி மட்டும் அல்ல. அரசியலை எழுதியவரும் அல்ல. அரசியலுக்கு வெளியே வரலாறு, இலக்கியம் ஆகிய தளங்களில் மிகப்பெரிய பங்களிப்பாற்றியவர். அவர் எழுதிய மாபெரும் ஆய்வுநூல்கள் அதற்கு பின்னர் வந்த அத்தனை ஆய்வுநூல்களுக்கும் அடித்தளமாக அமைபவை. வெறும் மேடைப்பேச்சாளர்களை அறிஞர்கள் என்றும் பேரறிஞர்கல் என்றும் சொல்லிக்கொண்டிருக்கிரோம். மெய்யான பேரரறிஞர்களை நமக்கு உண்மையில் தெரியாது என்பதுதான் காரணம்.

ஶ்ரீனிவாஸ் மகாதேவன்

முந்தைய கட்டுரைஇந்திய ஆலயக்கலை வகுப்புகள்