இளைமையை நோக்கி…

அன்புள்ள ஜெயமோகன்,

வாழும் தமிழ் இலக்கிய நிகழ்வுக்கு என் மனமார்ந்த வாழ்த்துக்கள். நீங்கள் கூறியது போல ஒரு குறைவான சாரார் கசப்பையும் காழ்ப்பையும் கொட்டிக் கொண்டிருந்தாலும் கூட இந்த வகையான நிகழ்ச்சிகள் அனைத்தையும் உளமார ஏற்றுக் கொள்பவர்களாகவே இளமை தலைமுறையினர் இருக்கிறார்கள். கசப்பு கொண்டவர்களில் பெரும்பாலானவர்கள் நீங்கள் ஏற்கனவே சொன்னது போல நடுவயது கடந்தவர்கள். வாழ்க்கையில் எதிலுமே பிடிப்பற்றவர்கள் . மேலோட்டமான அரசியல் சார்புநிலையும் கசப்புகளும் மட்டுமே கொண்டவர்கள். அவர்களிடமிருந்து வேறு எதையும் எதிர்பார்க்க முடியாது. ஏனென்றால் அவர்களுக்கு எதிர்காலம் என்பதே இல்லை. எதிர்காலம் குறித்த நம்பிக்கை அதை இங்கு செல்ல துடிப்பு கொண்டவ இளைஞர்கள் தான் இந்த வகையான செயல்பாடுகளுக்கு ஆதரவு தெரிவிப்பவர்கள். அவர்கள் என்றும் இருப்பார்கள்

ஆர். ராஜாராம்

முந்தைய கட்டுரைகாவியத்துளி
அடுத்த கட்டுரைஏன் பெரிய விழா?