அன்புள்ள ஜெ
நீங்கள் இலக்கியத்திருவிழாக்கள் பற்றிச் சொன்னது உண்மை. அனைவருக்கும் இடமளிக்கும் ஜெய்ப்பூர் போன்ற ஒரு திருவிழா ஒருபோதும் தீவிர இலக்கியத்தை முன்வைக்க முடியும் என்று நான் நினைக்கவில்லை. அது எங்குமே எப்போதுமே சாத்தியமாக இருந்தது இல்லை. உண்மையில் கேரளத்தில் நிகழ்ந்து வரும் நிகழ்வுகள் மிகப் பெரிதாக வளர்ந்து ஒரு கட்டத்தில் புகழ்பெற்ற ஆனால் மேலோட்டமான ஆளுமைகளை மட்டுமே முன் வைப்பதாக மாறிவிட்டிருக்கிறது .புகழ் பெற்ற அழைப்பதற்காக அவர்களுக்கு விருது அளிக்கிறோம் என்று முன்னரே வாக்குறுதி அளிக்கும் அவலம் கூட உள்ளது. விளையாட்டு வீரர்கள் போன்றவர்களை அழைத்து இந்த விழாக்களை நடத்துகிறார்கள். வாசிப்பை பரவலாக்குவதற்குப் பதிலாக இருக்கும் வாசிப்பையும் திசை திருப்பிவிடும் அளவுக்கு அவை இலக்கியத்திற்கு எதிரான திசைக்கு சென்று கொண்டிருக்கிறது.
ஶ்ரீனிவாஸன்











