அன்புள்ள ஜெ
ஆலயக்கலை, தத்துவம் எல்லாம் பல வகுப்புகளாகச் சென்றுகொண்டிருக்கின்றன. என் கேள்வி இவை எத்தனை வகுப்புகள் போகும் என்றுதான்?
கிருஷ்ணராஜ்
அன்புள்ள கிருஷ்ணராஜ்,
ஆலயக்கலை போன்றவற்றை அந்த ஆசிரியர்களே முடிவுசெய்யவேண்டும். தத்துவம் 15 வகுப்புகள் வரை செல்லும். அதன்பின் அடுத்தகட்ட நுணுக்கமான விவாதங்களுக்குள் செல்லக்கூடும். தத்துவம், கலை போன்றவற்றில் எல்லை என ஏதும் இல்லை. சென்றுகொண்டே இருக்கலாம்.
கல்வி ஓர் இன்பம். அது முடியவேண்டும் என ஏன் எதிர்பார்க்கிறீர்கள்?
ஜெ