மலையில் ஒரு வகுப்பு, கடிதம்

மதிப்புக்குரிய திரு ஜெயமோகன் அவர்களுக்கு,

இனிய தீபாவளி நல்வாழ்த்துக்கள்சென்னையில் இருந்து ராதிகா மேகநாதன் (மொழிபெயர்ப்பாளர்) எழுதுகிறேன். நீங்கள் அமெரிக்கா சென்றுள்ளதாக அறிந்தேன். இந்த மின்னஞ்சலை நான் பங்குபெற்ற செப்டம்பரில் நடந்த முதல் நிலை தத்துவ வகுப்பு முடிந்தவுடனேயே அனுப்ப வேண்டும் என்று நினைத்திருந்தேன்… 

திரு செல்வேந்திரன் வாட்சப் ஸ்டேட்டஸ் மூலமாக நீங்கள் Academies of Loudoun கல்லூரியில் ஆற்றிய உரையின் வீடியோவை பார்த்து மிகவும் மகிழ்ச்சி அடைந்தேன். நானும் திரு செல்வேந்திரனும் சென்ற மாதம் கமல் பண்பாடு மய்யம் நடத்திய English to Tamil மொழிப்பெயர்ப்பு முகாமில் சந்தித்தோம். சக எழுத்தாளர்களையும் என்ன போன்றே உங்கள் எழுத்துக்களின் ரசிகர்களையும் இவ்வாறு சந்திப்பது கடவுள் ஆசி. உங்கள் உரையை நான் பல முறை கேட்டேன்வெள்ளிமலை வகுப்பின் பின்குறிப்பு போலவும் ஒரு “enhanced  summary ” போலவும் இருந்தது தெரிவிக்கிறேன்

மிகுந்த பயத்தோடு தான் உங்கள் வகுப்பிற்கு வந்தேன். 44 வயதில் அதுவும் என் ஆதர்ச எழுத்தாளர் நடத்த போகும் ஒரு முகாமில் படிக்க வருகிறோம், நம்மால் சமாளிக்க முடியுமாபேரை கெடுத்து கொள்ள போகிறோமா என்ற அச்சம், self doubt…  stage fear உம் சிறு வயதில் இருந்தே நிறைய டீச்சர்களிடம் பரிசாக கிடைத்திருந்த வடுக்களும் என்னோடு கூடவே வெள்ளிமலைக்கு பயணம் செய்தன… 

முகாமின் கடைசி நாள் ஒரு தேர்வு வைத்தீர்கள் அல்லவா? அதில் நான் 75 marks தான் எடுத்தேன்அந்த வகுப்பிலேயே நான் தான் குறைவான மதிப்பெண் பெற்ற மாணவி என்று நினைக்கிறேன்! But really … 75 என்பது எனக்கு பிரம்மாண்டமான ஒரு விஷயம். பள்ளியிலோ கல்லூரியிலோ ஒரு தடவை கூட நான் திடீர் டெஸ்டில் இவ்வளவு மதிப்பெண் எடுத்ததில்லை. ஒன்று மறந்து விடுவேன்அல்ல கேள்வியையே தப்பாக புரிந்து கொண்டு வேறு ஏதோ ஒரு விடையை எழுதி விடுவேன்அதன்பின் எல்லோரிடம் வசவும் அடியும் வாங்குவேன்!  

ஆனால் நீங்கள் மூன்று நாட்கள் நடத்திய குருகுல முறை எனக்கு முற்றிலும் பொருந்தி இருந்தது. என்னாலேயே இது நான் தானா நம்ப முடியவில்லை, நிறைய விஷயங்களை நன்கு ஞாபகம் வைத்து கொண்டு நன்றாக focus செய்ய முடிந்தது. வெளியில் நாற்காலி போட்டு நடத்திய பாடம் மனதில் நன்றாக பதிந்ததுபகலில் கொடுத்த post lunch resting time மகா பயனுள்ளதாக இருந்தது. பாடம் எடுக்கும் முறையும் சுவாரஸ்யமாகவும்  சற்றும் சோர்வு தராத வகையிலும் இருந்தது. நான் முன்பே வந்திருக்க வேண்டும்! வெள்ளிமலையில் பல மாதங்களாக நடைபெற்று வரும் பல வகுப்புகளை தவற விட்டுவிட்டேன் என என் மீதும் என் உடல் நிலை மீதும் நானே கோபப்பட்டு வருந்தினேன்

இதை எல்லாம் ஏன் சொல்கிறேன் என்றால் உங்களை போல ஒரு சில  வாத்தியார்களாவது என் சிறு பருவத்தில் இருந்திருந்தால் நான் பள்ளிக்காலத்தையும் கல்லூரி காலத்தையும் வெறுத்திருக்க மாட்டேன்! நீங்கள் நடத்தும் இந்த வகுப்புகளுக்கு மிக்க நன்றி அய்யா.  எல்லா இடையூறுகளையும் தாண்டி வெள்ளிமலைக்கு வந்தது, உங்கள் தலைமையில் இந்திய தத்துவம் பயின்றது, பல புதிய நண்பர்களை சந்தித்தது, அந்த எளிய மண்ணின் உணவை ருசித்தது   அனைத்துமே எனக்கு மிகுந்த மனநிறைவு. இரண்டாம் நிலை வகுப்பு அடுத்த வருடம் பிப்ரவரிக்கு மேல் எப்போது நடந்தாலும் கட்டாயம் பங்கு பெறுவேன். 🙂 God willing, 

ராதிகா

முந்தைய கட்டுரைதியானவகுப்பு- கடிதம்
அடுத்த கட்டுரைகவனக்குறைவுகளில் இருந்து விடுபடும் வழி என்ன?