இந்திய தத்துவ வகுப்புகளுக்கு முன்…

ஐயா

தத்துவ வகுப்பில் கலந்து கொள்ளவே எனக்கு விருப்பம்ஆனால் இந்திய தத்துவம் முதல் நிலை வகுப்பு  முடிந்து விட்டது எப்போது மீண்டும் தொடங்குவீர்கள்

தத்துவம் இரண்டாம் மூன்றாம்  வகுப்புகளுக்கான  வாய்ப்புகள் மட்டுமே அதில் இருந்தது

இந்திய தத்துவ முதல் வகுப்பு தொடங்க இன்னும் காலா தாமதமாகும் என்றால் அதுவரை உங்கள் வகுப்புகளில் எதை கற்றுக் கொண்டால் எனக்கு பயனுள்ளதாக இருக்கும் என்று   சொல்லுங்கள்

அதற்கான கட்டணம் மற்றும் வகுப்பு எங்கு நடத்தப்படுகிறது என்பதை

சொல்ல முடிந்தால்  பயனுள்ளதாக இருக்கும்

மோகன் சுந்தரம்

அன்புள்ள மோகன்,

முதலாம் தத்துவ வகுப்பு உடனடியாக எப்போது நிகழுமென சொல்ல முடியாது

ஏனென்றால் மூன்று முதலாம் வகுப்புகள் நிகழ்ந்துள்ளன. அவர்களுக்கான அடுத்தடுத்த வகுப்புகள் நிகழவேண்டியுள்ளது

முன்னர் நீங்கள் தத்துவ அறிமுகத்துக்காக அஜிதனின் மேலைத்தத்துவ அறிமுக வகுப்பில் சேரலாம்.அது உடனடியாக அறிவிக்கப்படும் (மார்ச் 14, 15 ,16 வெள்ளி சனி ஞாயிறு)

மேலைத்தத்துவ அறிமுகம் இந்திய தத்துவத்தை பயில மிக முக்கியமானது. ஏனென்றால் இது நடராஜகுருநித்ய சைதன்ய யதி உருவாக்கிய மரபுஇங்கே  மேலைத் தத்துவ  அடிப்படைகளைக்  கொண்டுதான்  கீழைத்தத்துவம்  நவீன முறையில் கற்பிக்கப்படுகிறது. ஆகவே கீழைத்தத்துவம் பயில்பவர் எப்படியும் மேலைத்தத்துவம் பயின்றே ஆகவேண்டும். அதுவே முழுமையான சித்திரத்தை அளிக்கிறது

.வி.மணிகண்டன் நடத்தும் மேலை அழகியல் தத்துவ அறிமுகமும் உதவியானதுஉங்களுக்கு ஆர்வமிருந்தால் சாந்திகுமார அடிகள் நடத்தும் சைவ தத்துவ அறிமுக வகுப்பிலும் கலந்துகொள்ளலாம்

ஜெ

முந்தைய கட்டுரைமேலைத்தத்துவ வகுப்பு, ஒரு கடிதம்