
திரு.ஜெயமோகன் எழுத்தாளர் அவர்களுக்கு.
“தற்கடமை” கட்டுரை மிக அவசியமான ஒன்று.நிறைய பெற்றோர்கள் குழந்தைகளை படிக்க வைத்து வேலையில் அமர்த்தி கல்யாணம் பண்ணி கொடுப்பதுதான் கடமை என்று நினைக்கிறார்கள்.தங்கள் வாழும் காலத்தில் தங்களுக்காக வாழ்வதில்லை.குழந்தைகளுக்காக குடும்பத்திற்காக அறமற்ற செயல்களை செய்து விட்டு கடைசி காலத்தில் கோவில் குளம் என்று அலைந்து திரிவது ஒரு Model ஆக மாறிவிட்டுருக்கிறது. நித்யா சுவாமிகள் கூறியபடி மோட்சத்தின் திறவுகோலை தேடிக்கொண்டு இருக்கும் முதிய தலைமுறையை பார்த்தால் பரிதாபமாக இருக்கிறது. வாழும் வாழ்க்கையை குழந்தைகளுக்காக தியாகம் பண்ணும் பெற்றோர்கள் இன்று பரிதவிப்பதை நிறைய காணமுடிகிறது .காரணம் போட்டிப்போட்டு கொண்டு குழந்தைகளை வளர்க்கும் போது தர்மத்தை அறத்தை மறந்து விட்டு தற்போது அதை கோவில்களில் தேடுவது வேடிக்கை.கண் கெட்ட பிறகு சூர்ய நமஸ்காரம்.
வாழும் போது தன் கடமைகளை, குழந்தை வளர்ப்பில் மட்டுமல்ல சமுதாய வளர்ச்சியும் முக்கியம் என்பதை உணர்ந்தால் மோட்சம் நிச்சயம்.அதுவே தற்கடமை.
தா.சிதம்பரம்.











