தேவையான காணொலிகள்

அன்புள்ள ஜெ,

உங்கள் காணொலிகளைப் பார்த்துவருகிறேன். பொதுவாக அதிகம்பேரால் பார்க்கப்படுபவை என்றால் பொதுவான தலைப்புகளில் நீங்கள் பேசும் பணத்தின் மதிப்பென்ன, நேரத்தை பயன்படுத்துவது எப்படி என்பதுபோன்றவைதான். ஆனால் என்னைப்பொறுத்தவரை முக்கியமானவை கலைத் திரைப்படங்களின் வரலாறு, பக்தி இயக்கம் ஆகியவை பற்றியெல்லாம் நீங்கள் பேசியவைதான். அவை வெறும் தகவல்கள் அல்ல. அவற்றில் ஒரு பார்வை உள்ளது. அவசியமான செய்திகளை மட்டுமே கொண்டு கோத்து எடுக்கப்பட்டவை அவை. அந்த வகையான தெளிவுள்ள பார்வை இன்றைக்கு மிக அபூர்வமானது. அந்தவகையான உரைகளை அவ்வப்போதேனும் வெளியிடவேண்டும். பொதுவாக அனைவரும் அவற்றைப் பார்ப்பதில்லை. ஏனென்றால் திரும்பத் திரும்ப சிலவற்றையே கேட்பவர்கள்தான் அதிகம். ஆனாலும் அந்தவகையான உரைகள் தேவை. என்னைப்போனற சிலர் உள்ளனர் என்பதைச் சொல்ல விரும்புகிறேன்.

சி.ராஜன்பாபு

முந்தைய கட்டுரையோகம் நவீன அறிவியலுக்கு எதிரானதா?