மருத்துவம், கடிதம்

வணக்கம்.

நமது ஆரோக்கியம் சிறப்பாக இருக்க வேண்டும் என்றால், நமக்கு சில அடிப்படை அறிவு தேவை என்ற எண்ணம் தான், வகுப்பிற்கு வந்த  காரணம்.  அந்த நோக்கம் மிகச் சிறப்பாக நிறைவேறியது.

நன்றி. நன்றி.இப்படி ஒரு வகுப்பு ஏற்பாடு செய்த ஜெயமோகன் சார் அவர்களுக்கும் மற்றும் சார்ந்த அனைவருக்கும் நன்றிகள்.
மருத்துவர் மாரிராஜ்  அவர்களால், நவீன மருத்துவத்தின் அடிப்படைக்  கொள்கைகள் பற்றிய அருமையான அறிமுகம்  கொடுக்கப்பட்டது. தன்னம்பிக்கை மிக்க ஆசிரியர்.மாணவர்கள் மீதும் மிகுந்த நம்பிக்கை கொண்ட ஆசிரியர்.வேறுபட்ட அடிப்படை அறிவு கொண்ட பல தரப்பட்ட மாணவர்கள் கொண்ட ஒரு வகுப்பிற்கு இவ்வளவு  நேர்த்தியுடனும் ,அக்கறையுடனும் பாடம் கற்றுக் கொடுத்த பாங்கு மிகவும் சிறப்பானது. தன்னுடைய பல வருட படிப்பினை , அதன் அடிப்படைகளை ஒரு சில மணி நேரங்களில்  அழகாக முறையாக தொகுத்துக் கொடுத்தார். இவ்வகுப்பில் கற்றுக் கொண்ட விஷயங்கள்,நமக்குத் தேவையான மேலும் பல விஷயங்களை கற்றுக் கொண்டு புரிந்து கொள்ள முடியும்  என்ற நம்பிக்கையைத் தந்திருக்கிறது.
மிகுந்த நன்றிகளுடன்,
லஷ்மி கிருஷ்ணகுமார்
வைரமங்கலம், பவானி.
முந்தைய கட்டுரைஆலயம், கடிதம்
அடுத்த கட்டுரைநவீன மருத்துவம், கடிதம்