கவிஞர்களுடன் அமர்தல், கடிதம்

அன்புள்ள ஜெ,

நலமாக இருப்பீர்கள் என நம்புகிறேன். சென்ற முறை கவிஞனுடன் (கல்பற்றா நாராயணனுடன் ) இருத்தல் நிகழ்வுக்கு வர இயலாமல் அதை நினைத்து இன்றும் (தாங்கள் அவதானித்தவாறு) வருந்திக்கொண்டிருக்கிறேன்.
முழுமையறிவில் (Unified wisdom) ‘ கவிஞனுடன் இருத்தல் ‘ என்று ஒன்றை சேர்த்தால் நன்றாக இருக்குமா சார்.  நலமே விளைக!
மிக்க அன்புடன்
பார்த்திபன்.ம.
காரைக்கால்.

 

அன்புள்ள பார்த்திபன்,

கவிஞர் கல்பற்றா நாராயணன் ஓய்வாக இருந்தமையால் ஒரு உடனுறைதல் ஏற்பாடு செய்யப்பட்டது- எண்ணியபடி பெரும்பாலும் எவரும் ஆர்வம் காட்டவில்லை. ஓரிருவருக்காக அப்படி ஒரு நிகழ்வை ஒருங்கிணைக்க முடியாது. தமிழ்ச்சூழலில் அப்படிப்பட்ட ஆர்வங்களேதும் இல்லை என அறிவேன். ஆர்வமுள்ளவர்கள் அமையும்போது வாய்ப்பை பயன்படுத்திக்கொள்ளவேண்டும். அடுத்த முறை பார்க்கலாம் என ஒத்திப்போடும்படி எந்த ஒரு தீவிரமான நிகழ்வுமே தமிழகத்தில் இயல்பாக, அன்றாடமென நிகழ்ந்துகொண்டிருப்பதில்லை.

குரு நித்யா காவிய அரங்கு போன்ற நிகழ்வுகளில் தேவதேவன், மோகனரங்கன் என பல கவிஞர்கள் பங்கெடுத்தனர். அவர்களுடன் உடனுறைவதற்கும் உரையாடுவதற்குமான வாய்ப்புதான் அது.

ஜெ

முந்தைய கட்டுரைஏன் இஸ்லாமைத் தெரிந்துகொள்ள வேண்டும்?
அடுத்த கட்டுரைஜெர்மானிய தத்துவ அறிமுகம்