மருத்துவமுகாம் யாருக்கெல்லாம்?

 அன்புள்ள ஜெ,

மருத்துவ முகாம் பற்றிய அறிவிப்பைக் கண்டேன். இந்த மருத்துவ முகாமில் மருத்துவ ஆலோசனைகள் சொல்லப்படுமா? யாரெல்லாம் கலந்துகொள்ளலாம்?

கிருஷ்ணா

அன்புள்ள கிருஷ்ணா

இது மருத்துவ முகாம் அல்ல. மருத்துவ அறிமுக முகாம். நம் உடல் பற்றிய ஓர் அறிமுகம், நவீன மருத்துவத்தின் பார்வையில் நோய் – மருந்து பற்றிய ஒரு விளக்கம். அவ்வளவுதான்.

இது யோகசாதகர்கள், தியானம் பயில்பவர்கள் தங்கள் உடல்பற்றி அறிந்து அகவிழிப்பு கொள்ள அவசியமானது. ஒவ்வொரு சிந்திக்கும் மனிதனுக்கும் தன் உடலைப் பற்றி அறிய உதவுவது. தங்கள் நோய் அல்லது தங்கள் சுற்றத்தாரின் நோய் பற்றிய புரிதலை நாடுபவர்களுக்கும் உரியது

ஜெ

 

 

முந்தைய கட்டுரைதியானமும் அதன் வழிமுறைகளும் | தில்லை செந்தில்
அடுத்த கட்டுரைமரபும் கொண்டாட்டமும்