மரபும் கவிதையும்

என் பெருமதிப்பிற்குரிய‌ ஆசிரியருக்கு,

வணக்கம்!

அந்த பள்ளி பருவத்து மாணவி உள்ளே துள்ளி கொண்டிருந்திருக்கிறாள். அந்த உற்சாகம் எப்படியோ வெளிப்பட்டிருக்கிறது. கமலதேவி அக்காவின் என்னை பற்றிய முதல் எண்ணம் அதுதான் போலும். பார்த்த முதல் கணமே என் தோள் தொட, அவரின் தங்கை என்னிடம் அதை பகிர்ந்து கொண்டார். ‘மரபுஎன்பது ஒரு மந்திர சொல். அப்படித்தான் என்னுள் ஒலித்தது. ஜனவரி முதல் நாள் வகுப்புக்கு பதிவு செய்த நொடியிலிருந்து, என்னுள்ளே அச்சொல் மீள மீள ஒலித்து கொண்டிருந்ததை இப்போது உணர்கிறேன்

எம் ஆசிரியராய் அனுதினமும் நீங்கள் அளிப்பது கொடை. அதில்முழுமையறிவுஎன்பது பெருங்கொடை. அதில் என்னை ஈடுபடுத்திக் கொள்ள முடிந்தது பெரும் கணம். இது போன்ற இலக்கிய வகுப்பில், நாம் கற்று கொள்வது, குறிப்பிட்ட வகுப்பை தேர்ந்தெடுத்து அதற்காய் செல்லும் பாடம் மட்டுமல்ல. அங்கு பிற நண்பர்களுடன் நடக்கும் உரையாடல் வழி அடையும் அகவிரிவும், சுய ஆய்வும், செயலூக்கமுங்கூடத்தான்

மூன்று நாட்கள் மரபின் மைந்தன் வழி நீங்கள் அளித்த இவ்வனுபவத்தை வெண்பாக்களாய் எழுதி, அவருக்கு அனுப்பியிருந்தேன். அவர் அதில் இலக்கண குறைகளை சுட்டிக்காட்ட, அதை இருமுறை சீரமைத்து, அவருக்கு மீண்டும் அனுப்பினேன். நேரம் காலமெல்லாம் அவர் பொருட்படுத்தவில்லை. என் எல்லா கேள்விகளுக்கும் பதிலுரைத்தார்

மூன்றாம் முயற்சியில் இலக்கண நிறைவோடு, நான் முதன் முதலில் எழுதிய வெண்பாக்கள் நிறைவு கண்டது. என் சவால்கள், சக்திகள் ஓரளவு தெரிய வந்திருக்கிறது. இதில் தொடர்ந்து ஈடுபட இருக்கிறேன்

மரபின் மைந்தன் அவர்கள், “ரம்யா அழகாய் வந்திருக்கு, மரபின் கூறுகள் உங்களிடம் இருக்கிறது. தொடர்ந்து எழுத, இலக்கண இடையூறுகள் களையும், எனக்கு மிகுந்த மகிழ்ச்சிஎன்றார். தங்களிடம் எழுதிய வெண்பாக்களை பகிர்ந்து கொள்ள விரும்புகிறேன்.

ரம்யா மனோகரன்

மரபிலக்கிய வகுப்பு – வெண்பாக்கள்

முந்தைய கட்டுரைஆலயம் – கடிதம்
அடுத்த கட்டுரைமரபிலக்கியம் என்னும் மகிழ்வு