எத்தனை இலக்கிய நிகழ்வுகள்?

 

அன்புள்ள ஜெ

முழுமையறிவு கல்விநிகழ்வுகளில் நவீன இலக்கியத்திற்கான இடம் குறைவாகவே இருப்பதுபோல் உள்ளது. நவீன இலக்கியத்துக்கான வகுப்புகளை அதிகரிப்பது அவசியமென நினைக்கிறேன். பெரும்பாலும் ஆன்மிகம், மதம், தத்துவம், செவ்விலக்கியம் என்றே காணப்படுகிறது.

ரா.கிருஷ்ணகுமார்

அன்புள்ள கிருஷ்ணகுமார்

இத்தகைய நிகழ்வுகள் இயல்பாகவே பங்கேற்பாளர்களின் ஆர்வம், அவர்களின் தேவை சார்ந்து பெருகுபவை

யோகம், தியானம் ஆகியவையே மிக அதிகமாக விரும்பப்படுகின்றன. அடுத்தபடியாக இந்திய தத்துவம், ஆலயக்கலை. ஆகவே அந்த வகுப்புகள் மிகுதியாக நிகழ்கின்றன.

தொடர்ச்சியாக நவீன இலக்கிய வாசகர்களுக்கான பயிற்சி வகுப்புகள் நடைபெற்றுக்கொண்டேதான் இருகின்றன. வாசிப்புப் பயிற்சி என்பது நவீன இலக்கிய வாசகனுக்குரியதே. குருநித்யா ஆய்வரங்கம் ஒரு நவீன இலக்கிய நிகழ்வுதான். புதிய வாசகர்களுக்கான சந்திப்புகளும் நிகழ்கின்றன.

ஜெ

முந்தைய கட்டுரைஎக்பர்ட் சச்சிதானந்தம், கடிதம்
அடுத்த கட்டுரைஆலயம்,ஆகமம்- கடிதம்