நடைமுறையில் கண்டுகொண்ட ஒன்று உண்டு, இங்கே தீவிரமான கட்டுரைகளை வாசிப்பதற்கான பயிற்சி தேவை என்பது. பெரும்பாலானவர்கள் அவர்கள் வாசிப்பதாகவும் புரிந்துகொள்வதாகவும் எண்ணுகிறார்கள். அது பிரமை என்பது அவர்கள் ஒரு கட்டுரைக்கு அளிக்கும் எதிர்வினைகளில் இருந்து தெரியவரும். கட்டுரை வாசிப்புக்கான பயிற்சி என்பது நான் நித்யா குருகுலத்தில் அமெரிக்க ஆசிரியர்களிடமிருந்து கற்றது. அதை சில கல்விநிலையங்களில் கற்றுக்கொடுக்கவும் முடிந்துள்ளது. அந்த கல்வி பயனுள்ளதாக இருப்பதையும் அனுபவத்தில் கண்டேன்