ஆயுர்வேத அறிமுக வகுப்புகள் மீண்டும்…

    ஆயுர்வேத மருத்துவரும், புகழ்பெற்ற இலக்கியவாதியுமான சுனீல் கிருஷ்ணன் இதுவரை இரண்டு ஆயுர்வேத வகுப்புகள் நடத்தியிருக்கிறார். நீண்ட இடைவேளைக்குப்பின் மூன்றாவது வகுப்பை நடத்தவிருக்கிறார்.

    இந்த வகுப்பு மருத்துவ வகுப்பு அல்ல. ஆயுர்வேதம் என்னும் தொன்மையான இந்திய அறிவுத்துறையின் மீதான ஓர் அறிமுகம் மட்டுமே. அறிய விரும்பும் சாமானியர்களுக்கான வகுப்பு இது.  நீண்டகால கற்பித்தல் அனுபவம் கொண்ட ஓர் இலக்கிய ஆசிரியரால் நடத்தப்படுவதனால் பொதுவான ஆர்வம்கொண்ட எவருக்குமே சுவாரசியமான வகுப்பாக அமையும்.

    ஆயுர்வேத அறிமுகம் ஏன் தேவை? இரு சாராருக்கு இவ்வறிமுகம் தேவை என நினைப்பதனால் இவ்வகுப்பை அமைத்துள்ளோம்.

    யோகம், தியானம் ஆகியவற்றில் பயிற்சி பெறுபவர்களுக்கு ஆயுர்வேத அறிமுகம் இன்றியமையாததாக நெடுங்காலமாகச் சொல்லப்பட்டு வருகிறது. தன் உடலை (காயம்), தன் மூச்சை (பிராணன்), தன் உள்ளத்தை (சித்தம்) கவனிப்பது யோகம்- தியானம் ஆகியவற்றில் அவசியமானது. பெரும்பாலும் தோராயமான புரிதலே நம்மிடம் உள்ளது. பல புரிதல்கள் பிழையானவையும்கூட. பல எண்ணங்கள் மிகையானவை. சரியான புரிதலை அடைய இந்த வகுப்பு மிக உதவியானது.

    சாமானியர்கள், அன்றாட நிலையில் தங்கள் உடலைப் பற்றிய அறிதலைக் கொண்டிருக்கவேண்டும். எது உடலுக்கு உகந்தது, எது ஒவ்வாதது என தொடங்கி தன் உடல் செயல்படும் விதம் பற்றிய ஒரு புரிதல் தேவை. அது இயல்பான வாழ்க்கைக்கும் பயணம் போன்றவற்றுக்கும் அவசியமானது. அன்றாடவாழ்வில் நாம் உணவு, உடல்நிலை பற்றிகொண்டுள்ள பல எண்ணங்கள் ஆதாரங்கள் அற்ற நாட்டுப்புற நம்பிக்கைகளே. அவற்றை சரியானபடி புரிந்துகொண்டாகவேண்டும். நோய் அறிகுறிகள் இருந்தால் அவற்றை முன்னரே அறியவும் இவை உதவும். அதற்காகவே இவ்வகுப்புகள்.

    நாள் மார்ச் 21,22 மற்றும் 23 

    தொடர்புக்கு

    [email protected]

    அறிவிக்கப்பட்ட நிகழ்வு

    இடமிருப்பவை

    ஐரோப்பியத் தத்துவ அறிமுக வகுப்புகள்

     மேலைத்தத்துவ அறிமுகம் 

    அஜிதன் நடத்திவரும் மேலைத்தத்துவ வகுப்புகள் பங்கேற்பாளர்களிடையே பெரும் வரவேற்பைப் பெற்றவை. இன்றைய நவீனச் சிந்தனைகளைப் புரிந்துகொள்ள, இன்றைய அரசியலையும் திரைப்படம் உட்பட கலைகளையும், இலக்கியத்தையும் உள்வாங்க அவையே அடிப்படையானவை. மேலைச்சிந்தனைப் பயிற்சி அற்ற ஒருவரால் அவற்றை முழுமையாக புரிந்துகொள்ளவோ மதிப்பிடவோ முடியாது. நிர்வாகவியலில்கூட அடிப்படைகள் மேலைச்சிந்தனை சார்ந்தவை. ஆகவே நவீன மனிதனுக்கு தவிர்க்கவேமுடியாதவை.

    மேலைச்சிந்தனைகளை நாம் துண்டுதுண்டாக கட்டுரைகள், மேற்கோள்கள் வழியாகவே அறிந்திருக்கிறோம். அவை பலசமயம் நம் கற்பனைகள், அந்தத சூழல்கள் ஆகியவற்றை ஒட்டி பெரும்பாலும் நம்மால் பிழையாகப் புரிந்துகொள்ளப்பட்டிருக்கும். தொடக்கம் முதல் மேலைச்சிந்தனை  எப்படி அடிப்படையான வினாக்கள், மற்றும் அவற்றின் மீதான விவாதமாக உருவாகி வந்துள்ளது என்பதை அறிவது மிக அவசியமான ஒன்று.

    அத்தகைய அறிமுக வகுப்பு இது. ஒட்டுமொத்தமாக நவீன மேலைச்சிந்தனைகளை அறிமுகம் செய்து, அவற்றை மேற்கொண்டு விரிவாக்கம் செய்வதற்கான அடிப்படைகளையும் அளிக்கிறது.

    நாள் மார்ச் 14, 15 மற்றும் 16

    தொடர்புக்கு

    [email protected]

     

    வரவிருக்கும் நிகழ்வுகள்

    யோக வகுப்புகள்

    குரு சௌந்தர் நடத்தும் யோக வகுப்புகள் இன்று மலேசியா, சிஙகப்பூர், இலங்கை என பல நாடுகளில்  பரவி வருகின்றன. பிகார் சத்யானந்த யோகமையம் என்னும் மரபார்ந்த அமைப்பின் மாணவராக இருபதாண்டுகளுக்கும் மேல் பயிற்சி பெற்ற சௌந்தரின் வகுப்புகள் பதஞ்சலி வகுத்த யோக முறையை முழுமையாகச் சார்ந்து அமைந்தவை. இதுவரை நாநூறுக்கும் மேற்பட்டவர்கள் இங்கே நிகழும் வகுப்புகளில் பங்கெடுத்துள்ளனர்.

    யோக வகுப்புகளில் முதன்மையான அம்சம் ஆசிரியரே. அவர் ஓர் உடற்பயிற்சிப் பயிற்றுநர் போன்றவர் அல்ல. அவருடைய ஆளுமை முக்கியமானது. யோகமாணவர்கள் அவருடன் கொள்ளும் நீண்டகால தனிப்பட்ட உறவு யோகத்தில் முக்கியமானது. அத்துடன் யோக முறையின் தத்துவங்களை முறைப்படிக் கற்று அவற்றை விளக்குபவராகவும் அவர் இருக்கவேண்டும். அவ்வகையில் சௌந்தர் இன்று தமிழகத்தில் யோகம் பயிற்றுவிப்போரில் முதன்மையான ஒருவர்

    நாள் மார்ச் 28 29 மற்றும்  30 (வெள்ளி சனி ஞாயிறு)

    இப்போதே பதிவுசெய்யலாம் [email protected]

    நண்பர் ஃபெய்ஸ் காதிரி உருது மொழி அறிஞர். இந்திய உருதுமொழி இலக்கிய இயக்கத்துடன் முப்பதாண்டுகளாகத் தொடர்புடையவர். உருது மொழி ஆசிரியரும்கூட. அவர் நடத்தும் உருது இலக்கிய அறிமுக வகுப்புகள் நிகழ்கின்றன (இலக்கிய ஆர்வமுள்ள மாணவர்கள் இலவசமாகக் கலந்துகொள்ளலாம்)

    உருதுமொழி இலக்கியம் இந்தியாவின் பண்பாட்டுச் செல்வங்களில் ஒன்று. பண்டைய இந்தியாவில் உருவான இந்த இலக்கிய மரபு இன்று பாகிஸ்தான் உட்பட பலநாடுகளில் பரவியுள்ளது. குவாஜா முகையதீன் சிஷ்திமுதலிய ஆன்மிகச்செல்வர்கள்மிர்ஸா காலிப்  போன்ற நாடோடிப் பெருங்கவிஞர்கள், ஃபெய்ஸ் அகமது ஃபெய்ஸ் போன்ற நவீனக் கவிஞர்கள் என அதன் வீச்சு பெரியது.

    இந்தியாவின் இரண்டு பெரிய பண்பாட்டியக்கங்களான சூஃபி மெய்யியல் மற்றும் கஸல் இசைமரபு ஆகியவற்றை அறிய உருது இலக்கிய அறிமுகம் மிக அடிப்படையானது.

    உருது இலக்கியத்தை அறியாமல் இந்திய இலக்கியத்தை ஒருவர் அர்த்தபூர்வமாக அறிய முடியாது. ஒட்டுமொத்த இந்தியப் பண்பாட்டையும் புரிந்துகொள்ள முடியாது

    நாள் ஏப்ரல் 4,5 மற்றும் 6

    தொடர்புக்கு [email protected]

    முந்தைய கட்டுரைசைவம்- மெய்ஞானம்- கடிதம்
    அடுத்த கட்டுரைசைவம், ஆசிரியர், கடிதம்