வலையடிமை நோய்

ஆசிரியருக்கு,
இன்றைய உலகில் சமூக வலைத்தளத்தின் மோசமான தாக்கத்தை பற்றி அருமையாக கூறினீர்கள்.மனோதத்துவத்தில் Anxiety disorder நோய் வருவதற்கு இத்தகைய சமூக வலைதள பதறவைக்கும் Sensational ,social media postings  ஒருகாரணம்.தேவையில்லாமல் இளைஞர்களை பதற வைக்கும் அரசியல் சமூக வலைதளங்கள்.தடித்தமனம் Strong mind இருந்தால்தான் இத்தகைய பதற்றங்களை தூர விரட்ட முடியும்.இயற்கை தியானம் நம்முடைய குழந்தைகளக்கு,இளைஞர்களுக்கு அவசியமான ஒன்று.எந்த அளவுக்கு தேவையோ அந்த அளவுக்கு பயன்படுத்தக்கூடிய அறிவு தேவை.தொலைக்காட்சிகளிலிருந்து விலகி இருத்தல் மிக அவசியமான ஒன்று.நமது வீடுகளில் வரவேற்புஅறை இன்று ஒப்பாரி வைக்கும் பதற்றங்களையும்,பரபரப்புகளையும் கொண்டு வருகிறது.இப்போது உடனேயே  வீடு இடிந்து விழுவது போன்ற கற்பனைகளை பரப்பும் தொலைகாட்சி நிகழ்ச்சிகள்.இயற்கையை ரசிக்க மறந்து விட்ட குழந்தைகள், இளைஞர்கள்.இதுதான் அவர்களை சமூக குற்றங்களை செய்ய தூண்டு கின்றன.பெற்றோர்களும் Juvenile delinquency சிறுவர் குற்றங்கள்  வளர காரணமாகிறார்கள்.சட்டம் போட்டு தடுப்பதை விட இயற்கையை ரசிக்க,இயற்கை தியானமுறைகளான, பறவை பார்த்தால்,தாவரங்களை பார்த்தல்,மலையேற்ற பயிற்சி போன்றவைகளை பொற்றோர்கள் மேற்கொள்ள வேண்டும் குழந்தைகளுடன் பெற்றோர்களும் பயணிக்க வேண்டும்.நிறைய சர்வேதசப்பள்ளிகளில் தற்போது இவைகளை Field trip என்ன பெயரில் நடத்துகிறார்கள்.ஆனால் இவைகளை பெற்றோர்கள் இயல்பாகவே குழந்தைகளுடன் பயணித்து கற்றுக்கொடுக்க வேண்டும்.நம்மை பாழ் நரகத்திற்குள் தள்ளும் செயற்கையான
 பதற்றத்தையும் ,பரபரப்பையும் உருவாக்கும் அரசியல் தொலைக்காட்சி மற்றும், சமூக வலை தளங்களை உதறி தள்ள வேண்டும்.Social media is a necessary evil and a purposeful tool என்பதை மறுப்பதற்கில்லை. இயற்கைஅழகியலை நேரடியாக  உணர வைக்க வேண்டும். பாலியியல் குற்றங்களுக்கு காரணம் இயற்கை அழகியலை மறந்து செயற்கை ஊடங்களில் Artificial Intelligence மூலமாக வரும் விபரீத கற்பனைகளின் வடிவங்கள் தான்.விபரீத புத்தி வினாசம் என்பார்கள்.தினம் தினம் வலைதளங்கில் ஏற்படுத்தப்படும் வைரல் புரட்சிகள் அனைத்தும் செயற்கை என்பதை புரிந்து கொள்ளும் அறிவை பெற்றாலே அது நல்ல ஒரு தடித்த உறுதியான மனத்தை தரும்.அதற்கு பிரபஞ்ச தியானம் எனப்படும் இயற்கையை நேசித்தல் அவசியம்.அதை பயிற்சிகள் மூலம் கற்றுக்கொடுக்கும் முழுமையறிவு போன்ற அமைப்புகள் பரவ வேண்டும்.
தா.சிதம்பரம்
முந்தைய கட்டுரைமோனியர் விலியம்ஸ் பற்றி…
அடுத்த கட்டுரைஉபநிடத தரிசனம்