பெருஞ்செயல், கடிதம்

ஆசிரியருக்கு,

Kick start your day.என்பார்கள். அதுபோல கிளம்பி செல்லுங்கள் எட்டு திக்கும் அறிவு,அனுபவம் பெற.சிறு வயதில் தன்னம்பிக்கை எழுத்தாளர்கள் டாக்டர்.எம்.எஸ்.உதயமூர்த்தி,தமிழ்வாணன்,இதயம் மணியன், போன்ற எழுத்தாளர்களின் எழுத்து ஞாபகம் வருகிறது .சுயமுன்னேற்ற நூற்கள் அவசியம்.தங்களின் காணொளியை அவ்வப்போது எனது முகநூலில் பகிர்கிறேன் என்னுடைய கடிதத்துடன்.தற்போது இளைஞர்களை தட்டி எழுப்பி செயல்புரிய வைக்கும் பேச்சும் எழுத்தும் தேவைப்படுகிறது.

பாறை போன்ற தமோகுணம் படைத்த இளைஞர்களை மீண்டும் ஒரு உளமேம்பாட்டிற்கு  தயார் படுத்த வேண்டும் வாழ்க்கையில் செட்டில் ஆகி விட்டதாக அரசாங்க வேலை பார்த்து முடித்து விட்ட தலைமுறை முடிந்துவிட்டது.செட்டில் என்ற வார்த்தையை அகராதியிலிருந்து எடுக்க வேண்டும் இனிவரும் தலைமுறை அந்த வார்த்தையை பயன்படுத்த முடியாது.காரணம் வாழ்க்கை முறை, வாழ்க்கைதரம் மாறிவிட்டது.புதிய இடங்களை,புதிய மனிதர்களை பார்த்தால் மனம் விசாலம் அடையும்.

ஆயிரம் தலையை பார்த்தால் அன்று செய்த பாவம் தீரும்என்ற நாட்டார் வழக்குச்சொல் உண்டு.தினமும் காலையில் எழுந்து கிளம்பிச்செல்லுங்கள் புதிய பாதையை நோக்கி செல்ல செல்ல  அனுபவங்கள் அதிகரிக்கும்.வாழ்க்கையில் பிடிப்பு ஏற்படும்.நான் என்னுடைய இளைமைகாலத்தில் நாகாலாந்து மலை சாதி பள்ளிகளில் கழித்தேன்.தமிழ் நாட்டின் பல மாவட்டங்களின் பள்ளிகளில் ஆசிரியராக.விளைவு பல வகைப்பட்ட மனிதர்களை அவர்களுடான அனுபவங்கள்.

மனிதன் அடிப்படையில் நல்லவன் ,தயவு உள்ளவன்.கிணற்று தவளையாக உள்ளவன் அதுவே உலகம் என அதிலேயே மாண்டு போவான்.மட்டுமல்லாமல் பிறரையும் கிணற்றுக்குள் பிடித்து இழுத்து விடுவான்.சுவாமி விவேகானந்தரின் இந்த  சிறுகதையை காணொளியாக சென்னை விவேகானந்த இல்லத்தில் (Ice House)ல் காண்பிக்கிறார்கள்.திறமையும் நம்பிக்கையும் இருந்தால் மட்டும் இருந்தால் போதாது தளராத மனமும் விடாமுயற்சியும்  வெற்றியை தேடித்தரும் சாதனங்கள் என்பார் கால்வின் கூலிட்ஜ் என்ற மேனாட்டு தத்துவ ஆசிரியர். உங்கள் பயிற்சி வகுப்புகள் மேலும் சிறப்பாக நடைபெற வாழ்த்துக்கள்

தா.சிதம்பரம் 

முந்தைய கட்டுரைகமல், இளமை, கடிதம்
அடுத்த கட்டுரைகலை, இயற்கை- கடிதம்