புத்தரில் அமைதல்

 

மதிப்பிற்குரிய திரு.ஜெயமோகன் அவர்களுக்கு வணக்கம்.

ஜூன் கடைசி வாரத்தில் நடந்த விபாசனா பயிற்சியில் நான் அடைந்த அனுபங்களை எழுத விளைகிறேன்,

புத்தர் நான் 3வது படிக்கும் பொழுது பாட புத்தகத்தின் வழியே. எனக்கு அறிமுகமாகிறார். அவரது பிணி மூப்பு சாக்காடு அதன் பின் அவரது துறவு எனக்கு வருத்தமான மனநிலையை அந்த வயதில் தந்தது.

இன்று எனக்கு வயது 45, புத்தரை பற்றிய தேடுதல் என்னை விபாசனா பயிற்சிக்கு அழைத்து சென்றது. அதே மனநிலையில் நித்யவனத்தை நோக்கி பயணப்பட்டேன், அதிகாலை 3 மணிக்கு அந்தியுர் பேருந்து நிலையத்தை அடைந்தேன். அருகில் இருந்த மாரியம்மன் கோவிலில் சில நிமிடங்கள், பேருந்து நிலைய பயணிகள் அறையில் சில நிமிடங்கள், பேருந்து நிலைய பேக்கரியில் சில மணிநேரங்கள் என 4 மணி ஆனது. மணி 5 ஆக ஆக என்னுடன் பயணிக்கும் முகங்களை பேருந்து நிலையத்தி;ல் கண்டேன்.

பேருந்து அதிகாலை பூங்காற்றில் தவழ்ந்து மலையில் ஏறியது, சுற்றியிருந்த இயற்கை காட்சிகள் பயிற்சிக்கு மனதை தயார் படுத்திற்று, சிற்று{ர்களுக்க தினசரி செய்திதாள்களை விநியோகித்தபடி பேருந்து நித்யவனத்தை அடைந்தது.

 நித்தியவனத்தின் நுழைவாயில் கல்லூரியை நிகைவூட்டியது, முதலில் புத்தர் சிலையை பார்த்ததும் மனதில் உற்சாகம் தொற்றியது.

காலை உணவிற்கு பிறகு புத்தரின் சிலையருகே அமர்ந்து இருந்தபோது ஆசிரியர் அமலன் தனவு உதவியாளருடன் வர, அப்பொழுது ஆரம்பமானது எனது தியான வகுப்பு. அவரின் குரலில் ஒருவித அமைதியை உணர்ந்தேன்.

புத்தரின் அறிமுகத்துடன் ஆரம்பமானது வகுப்புடுழழமiபெ ழரச ஐவெநவெழைளெஇ னுளைவசயஉவழைளெஇ டுழபெ வநசஅ பழயட கழச பழழனநௌளஇ ழேடிடந ளுடைநnஉநஇ ஆiனெகரடடநௌளஇ ஏiடிhயளயயெ (ஆழமாக உள்நுழைவது) பற்றி விரிவான அறிமுகத்தை தந்தார் ஆசிரியர்.

மூச்சை கவனிக்கும் பயிற்சி ஆரம்பமானது, பின்பு மெல்ல உடம்பின பாகங்களை உற்று நோக்கும் பயிற்சி தன்னை உணரும் ஆரம்ப கட்ட கல்வியின் முதல் படிக்கல்லாக உணர்ந்தேன்.  நீண்ட நேரம் அமர்ந்து பயிற்சி செய்ய முடியுமா என என் கேள்விக்கு முடியும் என்ற பதிலை என் உடல் எனக்கு அளித்தது.

நடைதியானத்தில் சில நிமிடங்கள் இருந்து பின் தியானத்தில் அமரும் பொழுது மனம் அமைதியானது. ஆசிரியருடன் அமர்ந்து, நடந்து, உரையாடி தியானத்தை கற்றுக்கொண்டேன்.

மாலை மீண்டும் தியானம் ஆரம்பிக்கும் பொழுது முதல் மணி அடிக்க அதன் கூடவே ஒரு மழைத்துளி கூரையில் விழந்தது, மயில் அகவலை கவனிக்கும் படி ஆசிரியா கூற அதே சமயம் மயில் அகவியது இயற்கையின் ஆசிர்வாதமாக உணர்ந்தேன்.

ஆசிரியர் தனது அனுபவங்களில் இருந்து ஆன்மீக தேடலுக்கு எப்படி வந்தடைந்தார் என்பதை பகிர்;ந்தார். கேள்வி பதில் நேரத்தில் ஒரு நண்பர் ஆசிரியரிடம் அவரது அலளவiஉயட நஒpநசநைnஉந in னாலயயெ பற்றி கேட்க அதற்கு அவர் அனுபவங்கள் மனிதர்க்கு மனிதர் மாறுபடும் என கூறியது அவரது பறந்த அறிவை வெளிகாட்டியது.

இரண்டாம் நாள் அதிகாலையில் எழுந்து நித்யவனத்தின் அழகான இயற்கைகாட்சிகளின் நடுவே காலை நடை கூடவே நடை தியானத்தையும் செய்துபார்க்க மிக அழகான பொழுதாக அமைந்தது.

 அந்த நான் முழுக்க தியானத்தில், உரையாடலில் என புது விளக்கங்களை கண்டடைந்தேன். புத்தரின் அனைனடந pயவா மற்றும் மரணம் தாண்டிய பெருவாழ்வு, யதா பூத ஞான தரிசனம், சதி பதான பற்றி குறிப்புகளை எடுத்து கொண்டேன்.

  மிக அரிதான பொக்கிஷத்தை கற்று கொண்டதாக நினைக்கிறேன். ஆசிரியர் சொன்ன செய்திகளை குறிப்பெடுத்து இன்றும் அதை தேடி படித்துகொண்டிருக்கிறேன். அன்றாட வேலைகளுக்கு நடுவே நேரத்தை தியானத்திற்கு செலவிட்டு வருகிறேன். என்னை பார்க்கும் கோணமும் உலகை பார்க்கும் கோணமும் சற்றே மாறியிருப்பதாய் உணர்கிறேன்.

தம்மம் உங்களுக்கு வழிகாட்டும் என்ற புத்தரின் வாக்கியத்திலிருந்நு தியானத்தில் நுழைவாயில் இருப்பதாக உணர்கிறேன் மிக நீண்ட பாதை தெரிகிறது. ஆசிரியர் உடன் இருக்க பயணங்கள் என்றும் இனிமையானதே!

இந்த கல்வியை அளித்த ஆசிரியர் திரு. அமலன் அவர்களுக்கும் இயற்கையான இடத்தை கொடுத்து இந்த பயிற்சியை நடத்தும் திரு.ஜெயமோகன் அவர்களுக்கும் நன்றியை கூறிக்கொள்கிறேன். அன்பாக வரவேற்று இனிமையாக உபசரித்த திரு மணி அவர்களுக்கும், திருமதி.பார்வதி அம்மா திரு. பொம்மன் அவர்களுக்கும் நன்றியை கூறிக்கொள்கிறேன்.

 

தம்பிரான்

கோவை

முந்தைய கட்டுரைவிபாசனாவின் வழி
அடுத்த கட்டுரைபறவைபார்த்தல் வகுப்புகள்